கடந்த சனவரி 23 ஆம் தேதி முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தர பிரதேச பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அவரது அரசியல் பிரவேசம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட மாநிலம் ஆகும். அந்த மாநிலத்தில் மாயாவதி மற்றும் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இதனால் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது.


கடந்த சனவரி 23 ஆம் தேதி முதல் முறையாக காங்கிரஸ் கட்சியின் கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டதை அடுத்து "மிஷன் உத்தர பிரதேசம்" என்ற பேரணியில் ஈடுபட்டார். அதன்பின்னர் கடந்த மார்ச் 12 அன்று, முதல் முறையாக தனது முதல் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள காந்தி நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணி மாநாட்டில் தொடங்கினார். அப்பொழுது பாஜகவை கடுமையாக தாக்கி பேசினார்.


தற்போது, உத்தர பிரதேச பிரயாக்ராஜ் பகுதிக்கு சென்ற பிரியங்கா காந்தி "கங்கை நதி யாத்திரை" மேற்கொள்கிறார். மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த யாத்திரை பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தின் கங்கை நதிக்கரையில் தொடங்கி வாரணாசி வரை என மொத்தம் 140 கி.மீ தூரம் நதிக்கரை பயணம் செல்கிறார். இந்த பயணத்தின் போது நதிக்கரையில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.