ஆளும்கட்சியின் அத்துமீறல் அம்பலமானது; மே 12-ல் மறுவாக்குப்பதிவு...
திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் நடைப்பெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளது.
திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் நடைப்பெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளது.
திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியின் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 12-ம் தேதி மறுதேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், ஆளுங்கட்சி பிரமுகர்கள் வாக்குப்பதிவு மையங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாகவும், போலி வாக்குகளை பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்களின் மீது விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் நடைப்பெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிரப்பித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 11-ஆம் நாள் திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிகளில் நடைப்பெற்ற தேர்தலில் 81% வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவில் குளறுபடி நடத்திருப்பதாகவும், ஆளும் கட்சியினர் அதிகாரத்தை துஷ்பரியோகம் செய்ததாகவும் கடந்த ஏப்ரல் 19-ஆம் நாள் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரில் ‘திரிபுரா மேற்கு மக்களவை தொகுதிகான வாக்குப்பதிவு 1679 வாக்குப்பதிவு மையங்களில் நடைப்பெற்றது. இதில் 460-க்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் ஆளும்கட்சியினர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, போலி வாக்குகளை பதிவு செய்ததாகவும், வாக்காளர்களை அடித்து விரட்டியதாகவும்’ குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்த அத்துமீறல் சம்பவங்களின் போது மத்திய படையினர் பாதுக்காப்பு பணிகளில் ஈடுபடவில்லை எனவும் இந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த புகார்களின் மீது நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் தற்போது திரிபுரா மேற்கு மக்களவை தொகுதியில் நடைப்பெற்ற வாக்குப்பதிவு செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.