EC Order: 7 மாநிலங்களில் அதிகாரிகளை மாற்ற உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்! அதிருப்தியில் ஆளும் கட்சிகள்
Election Commission Latest Order : தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் மேற்கு வங்க மாநில ஆளும் கட்சி அதிருப்தி, பாஜகவின் தேர்தல் உத்தி என குற்றச்சாட்டு!
தேர்தல் திருவிழா களை கட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாக, மேற்குவங்கம், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் என ஏழு மாநிலங்களில் உள்துறை செயலாளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) மேற்கு வங்க காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் 6 மாநிலங்களில் உள்ள உள்துறை செயலாளர்களை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
மேற்கு வங்க காவல்துறைத் தலைவரை நீக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பொது நிர்வாகத் துறையின் செயலர்களையும் நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும் படிக்க - பாஜக வேட்பாளர், தொகுதி பங்கீடு எப்போது நிறைவடையும்? வானதி சீனிவாசன் கொடுத்த அப்டேட்
அதிகார்பூர்வ கடிதத்தின்படி, மேற்கு வங்க டிஜிபி ராஜீவ் குமார், தற்போதைய பதவியில் இருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டு "தேர்தல் சம்பந்தப்படாத பதவிக்கு" மாற்றப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மூன்று மூத்த அதிகாரிகள் கொண்ட தேர்தல் ஆணையத்தில் குழுவினால் புதிய டிஜிபி தெரிவு செய்யப்படுவார் என்றும் அவர் இன்று மாலை 5 மணிக்குள் நியமிக்கப்படுவார் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், இந்த இடமாற்றங்கள் தேர்தல் ஆணையம் உட்பட நாட்டின் அமைப்புகளின் மீது பாஜகவின் தவறான நோக்கத்தை வெளிப்படுத்தும் தெளிவான உதாரணம் என்று குற்றம் சாட்டியது.
மேலும் படிக்க | மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு
“தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை கைப்பற்ற பாஜக தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மத்திய ஏஜென்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கட்டுப்பாட்டை பாரதிய ஜனதா கட்சியினர் எடுத்துக் கொண்டுள்ளனர்" என்று டிஎம்சி தலைவர் குணால் கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்குப் பிறகும் பாஜக தனது நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிகலை எடுத்துவருகிறது. தேர்தல் ஆணையம் உட்பட அமைப்புகளின் செயல்பாட்டைப் பிடிக்கவும் கண்காணிக்கவும் அது தன்னால் முடிந்தவரை முயற்சிக்கிறது என்று கோஷ் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையர்களின் நியமனத்தில் கூட அவர்கள் தலையிடுகிறார்கள். இன்று எடுக்கப்பட்ட நடவடிக்கை, தேர்தல் ஆணையத்தின் மீதான பாஜகவின் கட்டுப்பாட்டிற்கு ஒரு தெளிவான உதாரணம் என்று பலரும் பாஜகவின் மீது அதிருப்தியை வெளிபடுத்துகின்றனர்.
இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. ஜூன் 4, 2024 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவுகள் அறிவிக்கப்படும். 2024 மக்களவைத் தேர்தல் தேதிகள் மற்றும் முழு அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்த ஓரிரு நாட்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - பாஜக பற்றி அறிக்கைவிட பழனிசாமிக்கு முதுகெலும்பு இல்லையா? டிஆர்பாலு சரமாரி கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ