தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த வாக்குப்பதிவின் போது தர்மபுரி, கடலூர், திருவள்ளூர் ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட 46 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது. இந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மறுவாக்கப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ பரிந்துறை செய்தார்.


இந்நிலையில் தற்போது தர்மபுரி தொகுதியில் 8 வாக்குச்சாவடிகள், தேனி தொகுதியில் 2 வாக்குச்சாவடி, கடலூர், ஈரோடு மற்றும் திருவள்ளூரில் தலா ஒரு வாக்குச்சாவடி என 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு பிரப்பிதுள்ளது. மறுவாக்குப்பதிவு ஆனது வருகிற 19-ஆம் தேதி நடைபெறுமென ஆணையம் குறிப்பிட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுமெனவும் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதை தொடர்ந்து, தற்போது தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம். 


மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகள்:-


திருவள்ளுர்: பூந்தமல்லியில் உள்ள 195-வது வாக்குச்சாவடி 


தருமபுரி: 181, 182, 192, 193, 194, 195, 196, 197-வது வாக்குச்சாவடிகள் 


கடலூர்: பண்ருட்டி அருகே 210-வது வாக்குச்சாவடி


ஈரோடு: திருமங்கலத்தில் உள்ள 248வது வாக்குச்சாவடி (1/2)


தேனி: ஆண்டிப்பட்டியில் உள்ள 67-வது வாக்குச்சாவடி, பெரியகுளத்தில் உள்ள 197-வது வாக்குச்சாவடி (2/2).