Election Commission Releases Electoral Bond Data: எஸ்பிஐ (SBI) வழங்கிய தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதன் இணையத்தில் பதிவேற்றம் செய்தது. எந்தெந்த நிறுவனங்கள் தனி நபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற விவரங்களும் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக மாற்றினார்கள் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில நாள்களுக்கு முன் தேர்தல் பத்திரம் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. 2018ஆம் ஆண்டு மத்தியில் ஆளும் பாஜக அரசால், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் விதமாக இந்த தேர்தல் பத்திரம் நடைமுறை கொண்டுவரப்பட்டது. தேர்தல் பத்திரம் என்பதை கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் நபர் எஸ்பிஐயின் வங்கி கிளைக்கு சென்று, அளிக்க விரும்பும் தொகைக்கு ஏற்ப பத்திரத்தை வாங்கிக்கொள்ளலாம்.


தேர்தல் பத்திரம் என்றால் என்ன? 


பின்னர், அதனை கட்சிகள் எஸ்பிஐயில் வரவு வைத்துக்கொள்ளலாம். இந்த நடைமுறை 2018இல் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திரம் நடைமுறை தொடங்கியதில் இருந்து தற்போது வரை மொத்தம் எவ்வளவு தொகை யாரால் வந்துள்ளது, யாரால் எவ்வளவு வரவு வைக்கப்பட்டது என்ற தரவை தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்படும்படியும் உத்தரவிட்டது. 


மேலும் படிக்க | மம்தா பானர்ஜிக்கு படுகாயம் - முகம் முழுவதும் ரத்தம்... அதிர்ச்சி!


தொடர்ந்து, அதற்கு கால அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியை கண்டித்த உச்ச நீதிமன்ற மார்ச் 13ஆம் தேதி மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திரம் குறித்த விவரங்களை முழுமையாக சமர்பிக்கும்படி உத்தரவிட்டது. தொடர்ந்து, நேற்றைய தினம் எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்த நிலையில், இதனை மார்ச் 15ஆம் தேதி மாலை தேர்தல் ஆணையம் பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. 



இன்று வெளியான தகவல்கள்


அந்த வகையில், இன்றிரவே தேர்தல் ஆணையம் அதன் தளத்தில் இதுகுறித்த தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில், தனி நபர்கள் அல்லது நிறுவனம் தேர்தல் பத்திரத்தை வாங்கிய விவரங்களும், அதனை வரவு வைத்த கட்சிகளின் தரவுகளும் வெளியாகி உள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் அதன் தளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளை ஆராய்ந்து பல்வேறு புள்ளிவிவரங்களும் தற்போது இணையத்தில் வரத் தொடங்கி உள்ளன. 


குறிப்பாக எந்தெந்த கட்சிகள் இந்த தேர்தல் பத்திரம் மூலம் எவ்வளவு கோடி ரூபாய் நிதியை திரட்டியது என்பது குறித்து Alt News நிறுவனத்தின் முகமது சுபைர் கருத்து புள்ளிவிவரங்கள் அடங்கிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இருப்பினும், அந்த தகவல்களில் சிறு பிழைகள் இருப்பதாக கூறி அவர் நீக்கிவிட்டதால், புதிய தகவல் வந்த பின்னர் இது அப்டேட் செய்யப்படும். இதுவரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் 6,061 கோடி ரூபாயை பாஜக நிதியாக திரட்டி உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


சந்தேகத்தை எழுப்பும் நிதிகள்


இதில், Megha Engineering And Infrastructures Limited பல கோடி ரூபாயை அளித்த ஏப்ரல்  11ஆம் தேதிவரை கொடுத்துள்ள நிலையில், அடுத்த 2023ஆம் ஆண்டு மே 12ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள தானே - போரிவலி சுரங்க திட்டம் அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



உத்தராகண்ட் சுரங்க இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி 41 தொழிலாளர்கள் 17 நாட்களுக்கு மேலாக சிக்கியிருந்து, அதன்பின் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இருந்த சுரங்கத்தை கட்டி வந்த நிறுவனமான நவ யுகா நிறுவனமும் பல கோடி ரூபாயை அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரங்களாக நன்கொடை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் படிக்க | குடியுரிமை திருத்தம் சட்டம் தொடர்பாக மக்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் -ராஜ்நாத் சிங்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ