மக்களவைத் தேர்தல்கள் 2024 செய்திகள்: மக்களவைத் தேர்தல் தேதிக்கான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. மக்களவைத் தேர்தல் தேதிகள் நாளை (சனிக்கிழமை) மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது.பொதுத் தேர்தல் அட்டவணை குறித்த விரிவான தகவல்களை செய்தியாளர் சந்திப்பின் மூலம் முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தல் தேதி தொடர்பானத் தகவலை தேர்தல் ஆணையம் சமூக வலைதளமான எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளது. இந்த முறை லோக்சபா தேர்தல் 6 முதல் 7 கட்டங்களாக நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மே மாதம் மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.



கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி பொதுத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. கடந்த முறை மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை பல கட்டமாக நடைபெற்றது. கடந்த மக்களவைத் தேர்தலில் 67.1% வாக்குகள் பதிவாகியிருந்தன. அதேசமயம், மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. 


இந்த முறை மக்களவைத் தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இம்முறை தேர்தலில் ஊழல் மற்றும் முறைகேடுகளை தடுக்க பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


மேலும் படிக்க - இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய ஆணையர்களாக சுக்பீர் சந்த, ஞானேஷ் குமார் தேர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ