உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் நிதி பெறுவது தொடர்பாக,  வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில்,  தேர்தல் பத்திரங்கள் (Electoral Bonds) மூலம் யார் எந்த கட்சிக்கு நிதி உதவி செய்தார்கள் என்பது குறித்த தகவல்களை, மார்ச் மாதம் ஆறாம் தேதிக்குள், தேர்தல் ஆணையத்திடம் விவரங்களை அழிக்க வேண்டும் என, பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டது. தேர்தல் பத்திர திட்டம் சட்டபூர்வமானது இல்லை என்று கூறி தேர்தல் பத்திர திட்டத்தையும் ரத்து செய்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் காலக்கெடுவைத் தவறவிட்ட எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் மூல நிதி வழங்கப்பட்டது குறித்த தகவல்களை வழங்கவில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காலக்கெடுவுக்குள் தரவுகளை வெளியிட தவறிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா


இந்நிலையில், மார்ச் 6 ஆம் தேதி நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் தரவுகளை வெளியிட ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (State Bank of India)  வங்கி தவறியதை அடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்ற அவமதிப்புக்காக ஜனநாயக சீர்திருத்த சங்கம் என்னும் தன்னார்வ அமைப்பு  (ADR) மார்ச் 7ம் தேதி வியாழன் அன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதாக குற்றம் சாட்டியுள்ள ADR


ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தாக்கல் செய்துள்ள மனுவில் எஸ்பிஐ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளது. தன்னிடம் தரவுகள் உள்ள போதிலும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட எஸ்பிஐ தவறிவிட்டது என்று ADR குற்றம் சாட்டியுள்ளது. எஸ்பிஐ பத்திர விவரங்களை உடனடியாக வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் கோரியுள்ளது.


மேலும் படிக்க | தேர்தல் பத்திர நிதி விவகாரம்...  4 மாத கால அவகாசம் கேட்கும் SBI !


 ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிய எஸ்பிஐ


முன்னதாக, மார்ச் 4 அன்று, எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திர நிதி விவரங்களை வெளியிட ஜூன் 30 வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரியது, ஆனால் இந்த மனு உச்ச நீதிமன்றத்தால் விசாரணைக்கு இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. எஸ்பிஐ தனது மனுவில், பல்வேறு ஆதாரங்களில் இருந்து தகவல்களை திரட்டுவதற்கு கால நேரம் தேவை என்று மனௌவில் கூறியுள்ளது.


தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்


முன்னதாக, தேர்தல் பத்திரங்கள் அனைத்தும், பாரத ஸ்டேட் வங்கி (SBI) மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை ரத்து செய்ததோடு, தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் அளிக்கப்பட்ட விவரங்களை, தேர்தல் ஆணையத்தின் தெரிவிக்க வேண்டும் என்றும், எஸ்பிஐ வங்கி அளிக்கும் தகவல்களை, தேர்தல் ஆணையம் தனது இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. 2019ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி முதல், தற்போது வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் அனைத்தையும், SBI வங்கி சமர்ப்பிக்க வேண்டும்.


மேலும் படிக்க | ஆபத்தான ஈனுலை திட்டம்...? திறந்துவைக்கும் பிரதமர் - முதல்வர் புறக்கணிப்பு ஏன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ