விசாகப்பட்டினம்: ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் எலுரு நகரில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் அதிக அளவு ஈயம், நிக்கல் போன்ற கன உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இரத்த மாதிரிகளில் ஈயம் மற்றும் நிக்கலை அதிக அளவில் கண்டறிந்தோம். இதுவும் இந்த மர்ம நோய்க்கு ஒரு காரணமாக இருக்கலாம். புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு (AIIMS) அதிக மாதிரிகளை அனுப்பி வருகிறோம்" என்று கோதாவரி மாவட்டம் இணை செயலாளர் ஹிமான்ஷு சுக்லா ஊடகங்களிடம் தெரிவித்தார்.


எலூருவில் (Eluru) நூற்றுக்கணக்கானோரை ஏற்ககனவே பாதித்துள்ள மர்ம நோய்க்கும் கனரக உலோகங்கள் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேகிப்பதாக அவர் கூறினார். மேற்கு கோதாவரி மாவட்டத்தின் தலைமையகமான விஜயவாடாவிலிருந்து 58 கி.மீ வடகிழக்கில் உள்ள எலுரு, நெல் சாகுபடி மற்றும் மீன்வளர்ப்புத் துறையில் மையமாக விளங்கும் பகுதியியாகும்.


"நிக்கல் மற்றும் ஈயம் (Lead) எந்த மூலங்களிலிருந்து வந்திருக்கும் என்பதைக் கண்டறிய முயற்சிப்பதில் நாங்கள் மும்முரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று அவர் கூறினார்.


இந்த உலோகங்கள் பால் மற்றும் தண்ணீரில் கலந்திருக்கின்றனவா என ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டது. அவற்றில் இந்த உலோகங்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார் சுக்லா.


"ஆகவே தண்ணீர் மற்றும் பால் காரணமாக இந்த நோய் வரவில்லை. இதற்கு மற்ற விஷயங்கள் காரணமாக இருக்கலாம். காய்கறிகள் இதற்கு காரணமாக இருக்கலாமா என்பது குறித்து ஏற்கனவே ஆராய்ந்து வருகிறோம். இனிப்புகள் போன்ற இன்னும் பல பொருட்களிலும் ஆராய்ச்சி தொடர்கிறது” என்று அவர் தெரிவித்தார்.


ALSO READ: இந்த மாநிலத்தில் பரவும் மர்ம நோய், 1 பலி; ஆபத்தான நிலையில் 292 பேர்


அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் இந்த மர்ம நோய்க்கான மூலத்தை கண்டறிய நீக்குதல் முறையை கடைப்பிடித்துள்ளனர். ஒவ்வொன்றாக ஆராய்ந்து சாத்தியமான காரணங்களை நீக்கி வருகின்றனர். இந்த நோய் மர்மமான ஒரு நோயாக உள்ளது. இது குறித்து கண்டறிய இன்னும் அதிக சோதனைகள் தேவைப்படுகின்றன.


நேற்றிரவு, காய்கறி மாதிரிகள் சோதனைக்காக ஹைதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்திற்கு (என்ஐஎன்) அனுப்பப்பட்டன. மற்ற சில மாதிரிகள் டெல்லிக்கும் (Delhi) அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் முடிவுகள் அடுத்த 12 மணி நேரத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.


இதற்கிடையில், இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 551 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 174 பேர் சிகிச்சையில் உள்ளனர். 350 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டனர். 


ALSO READ: வாயு பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய வழிமுறைகள்...


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR