விசாகப்பட்டினத்தில் ரயில் பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் ரயில் என்ஜின் மட்டும் தனியாக கழன்று சுமார் 2 கிமி ஓடிய சம்பவம் பெருப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசாவின் புவனேஸ்வரில் இருந்து செகந்திராபாத் செல்லும் விசாகா எக்ஸ்பிரஸின் என்ஜின்- பெட்டிகளுடுன் இணைத்திருந்த இணைப்பு கம்பி கழன்று விழுந்ததால் பெட்டிகள் அனைத்தும் நக்கப்பள்ளி மற்றும் நர்சிபட்னம் சாலை ரயில் நிலையம் இடையே நின்றன.


பெட்டிகள் கழன்றதை அறியாத என்ஜினை அதன் ஓட்டுநர் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச் சென்றார்.


இந்நிலையில் பெட்டிகள் மட்டும் தனியாக நிற்பதை அறிந்த பயணிகள் கொடுத்த தகவலையடுத்து ரயில் ஓட்டுநருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அதன் பின்னர் மீண்டும் அவர் என்ஜினை நர்சிபட்னம் ஒட்டி வந்து பின்னர் என்ஜின் பொறுத்தப்பட்டு வழக்கம் போல் ரயில் இயக்கப்பட்டது. இந்த நிகழ்வு காரணமாக ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டது.


இதற்கிடையில் ரயில் வண்டியின் கடைசி இரண்டு பெட்டிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டதை அறிந்த ரயில் ஓட்டுநர் ரயில்வே காவல்துறையினை அனுகி விவரத்தை எடுத்துரைத்ததாக தெரிகிறது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெட்டிகளை மீட்டு வந்ததாக தெரிகிறது.


தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த எதிர்பாரா சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.