PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: வட்டி விகிதத்தை அதிகரித்தது EPFO
EPFO Interest Rate: EPFO அளித்துள்ள செய்தி ஒரு மகிழ்ச்சி செய்தியாக வந்துள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்தி EPFO 6.5 கோடி இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு பெரிய நிவாரணம் அளித்துள்ளது.
EPFO Interest Rate: EPFO சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. இது அவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, இன்று, அதாவது சனிக்கிழமை 2023-24 ஆம் ஆண்டிற்கான இபிஎப் தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. EPFO வட்டி விகிதத்தை முன்னர் இருந்த 8.15% இலிருந்து 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.25% ஆக உயர்த்தியுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு இந்த விகிதம் 8.10% ஆக இருந்தது.
முன்னதாக பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் சம்பள வர்க்கத்தினர் வரி அடுக்குகளில் ஏதாவது மாற்றம் செய்யப்படும் என்றும் அதன் மூலம் அவர்களுக்கு வரி சலுகைகள் அளிக்கப்படும் என்றும் நம்பி இருந்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் அவர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர். இப்போது EPFO அளித்துள்ள இந்த செய்தி ஏமாற்றத்திற்கு பிறகு ஒரு மகிழ்ச்சி செய்தியாக வந்துள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்தி (Interest Rate) EPFO 6.5 கோடி இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு (EPFO Subscribers) பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
இதற்கான அறிவிப்பு எப்போது வெளிவரும்?
சனிக்கிழமை அன்று தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் குபேந்திரன் யாதவ் தலைமையிலான இபிஎப்ஓ -வின் மத்திய அறங்காவலர் குழு, 235 வது குழு கூட்டத்தில் முன்னொழியப்பட்ட இந்த வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் அளித்தது. எனினும் இதுவரை இந்த வட்டி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. நிதி அமைச்சகத்திடமிருந்து (Finance Ministry) ஒப்புதல் கிடைத்த பிறகு வட்டி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளிவரும். அதன் பின்னர் இபிஎஃப்ஓ அனைத்து சந்தாதாரர்களின் கணக்கிலும் வட்டி தொகையை டெபாசிட் செய்யும்.
அதிகரித்த வண்டி VPF -இலும் கிடைக்கும்
வட்டி அதிகரிப்பிற்கான அறிவிப்பு வந்த பின்னர் உயர்த்தப்பட்ட 8.25% வட்டி விகிதம் விபிஎஃப் அதாவது Voluntary Provident Fund -இலும் கிடைக்கும். இது தவிர விதிகளின்படி விலக்கு பெறும் அறக்கட்டளைகளும் தங்கள் பணியாளர்களுக்கு அதிகரித்த இபிஎஃப் விகிதத்தின் பலனை வழங்கலாம். ஒரு நிறுவனத்தில் 20 அல்லது இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் சம்பள வர்க்கத்தில் இருந்தால், அங்கு வருங்கால வைப்பு நிதி (EPF) அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் கீழ், ஊழியர்களின் மாத சம்பளத்தில் 12 சதவீதம் இபிஎப் கணக்கில் (EPF Account) முதலீடு செய்யப்படுகிறது. நிறுவனமும் ஊழியர்களின் இபிஎப் கணக்கில் தனது பங்களிப்பை செலுத்துகிறது.
நிறுவனத்தின் பங்களிப்பில் உள்ள பிரிவுகள்
ஒரு பணியாளர் பங்களிக்கும் தொகை அவரது இபிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதே அளவுத் தொகையை நிறுவனமும் வழங்குகிறது. எனினும், நிறுவனம் வழங்கும் தொகையில் 3.67% இபிஎப் கணக்கிற்கு செல்கிறது. மீதமுள்ள 8.33% தொகை பணியாளர் ஓய்வூதிய திட்டம் அதாவது EPS -க்கு செல்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இபிஎஃப் தொகையில் கிடைக்கும் வடிவிகிதம் 2015-16ஆம் நிதியாண்டில் மிக அதிகமாக இருந்தது. அந்த ஆண்டில் இபிஎஃப் தொகையில் பணியாளர்களுக்கு 8.8% வட்டி கிடைத்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ