சகோதரி என்று கருதி, உங்களது அடிகளை, கோபங்களை ஆசீர்வாதமாக எடுத்துக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்க மாநிலம் பங்குரா, புருலியா உள்ளிட்டஇடங்களில் பிரதமர் மோடி இன்று பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது பேசிய அவர், "என்னை பிரதமராக ஏற்க மாட்டேன் என மம்தா கூறி வருகிறார். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பிரதமராக ஏற்க அவர் தயாராக இருக்கிறார். என் மீது அவர் கோபமாக இருக்கிறார் என்று தெரியும். அவர் அப்படி கூறியது பரவாயில்லை. எனக்கு 130 கோடி மக்களின் ஆதரவும், அன்பும் உள்ளது. 


முதல்வர் மம்தா, மேற்கு வங்க மாநிலத்தின் பொருளாதாரத்தை அழித்துவிட்டார். மக்களை ஏமாற்றிவிட்டார். என் மீது அவர் வீசும் கற்களை எனக்கு, அவர் அளிக்கும் ஆசீர்வாதமாக கருதிக்கொள்கிறேன். அவர் என்னை அடிப்பது போன்று நினைத்துக்கொள்கிறார். மம்தா அவர்களை சகோதரி(திதி) என்று கருதி, அவரது அடிகளை ஆசீர்வாதமாக கருதி ஏற்றுக்கொள்கிறேன்.


என்னை அடித்தது போல், சிட் ஃபண்டில் மோசடி செய்து மக்களை ஏமாற்றிய உங்களது நண்பர்களை அறையத் தயாரா? அதற்கு மட்டும் ஏன் பயப்படுகிறீர்கள்?. ஃபனி புயலின் போது, அவருடன் பேச முற்பட்டேன். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. ஒரு இக்கட்டான சூழ்நிலையில் கூட, பிரதமருக்கு பதில் அளிக்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை. பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம் பேசி மேற்கு வங்க மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்தோம். 


அதே போன்று நாட்டில் ஊடுவும் தீவிரவாதிகளை அவர் ஆதரிக்கிறார். அதே நேரத்தில் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களை செய்துவரும் ராணுவத்தினரை அவர் மதிப்பது கூட இல்லை" என்று பேசியுள்ளார்.