பீகாரில் ரயில் விபத்து; பலியானோர் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல்
பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் ஏற்ப்பட்ட எக்ஸ்பிரெஸ் ரெயில் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகாரின் ஜோக்பானி என்ற இடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் வரை சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் வண்டி எண் 12487 என்ற ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரயில் இன்று அதிகாலை 3:58 மணியளவில் பீகார் மாநிலம் வைஷாலி அருகே உள்ள ஷகாதை பஸர்க் என்ற இடத்தில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் S8, S9, S10, one general மற்றும் ஒரு AC B3 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். ஏராளமான பயணிகள் காயமடைந்ததாகவும், அதில் 11பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.
விபத்தைத் தொடர்ந்து சோனாப்பூர் மற்றும் பராவுனி பகுதியில் இருந்து மருத்துவர்களும், மீட்புக் குழுவினரும் விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.
சோன்பூர் மற்றும் பராயூனி பகுதிகளில் இருந்து டாக்டர்கள் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். விபத்துக்கான இந்திய ரயில்வே ஹெல்ப்லைன் எண்களை வெளியிட்டுள்ளது - சோன்பூர் - 06158221645; ஹஜிப்பூர் - 06224272230 மற்றும் பராயுனி - 0627923222.
இந்தநிலையில், இந்த விபத்துக்குறித்து கூறிய பீகார் முதல்-அமைச்சர், ரெயில் விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு நிதீஷ் குமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். அனைத்து வித உதவிகளையும் மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு உள்ளார்.