சவப்பெட்டியுடன் சிரித்துக் கொண்டே ஒரு குடும்பம் குரூப் போட்டோ எடுத்து போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணாடி ப்ரீசரில்  வைக்கப்பட்ட சடலத்தின் முன் பக்கமும், பின் பக்கமும் குடும்ப உறவினர்கள் சூழ்ந்து கொண்டு சிரித்துக் கொண்டே குடும்ப போட்டோவுக்காக போஸ் கொடுத்துள்ளனர். இது இந்த போட்டோவை காணும் பலர் மனதிலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பலதரப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானது. துக்க வீட்டில் இப்படியா சிரித்துக் கொண்டு போட்டோ சூட் நடத்துவது? போன்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்த புகைப்படம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா, மல்லபள்ளியில் எடுக்கப்பட்டது என தெரியவந்ததுள்ளது. 


மர்யாம்மா என்ற  95 வயதான மூதாட்டி கடந்த வாரம் புதன்கிழமை மரணம் அடைந்துள்ளார். அவரது உடல் ப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்டு அடுத்த நாள் அடக்கம் செய்யப்பட்டார். அவரை அடக்கம் செய்யும் முன்பு குடும்ப உறவினர்கள் சேர்ந்து சிரித்துக் கொண்டே குரூப் போட்டோ எடுத்துள்ளனர். இதை அவர்கள் தங்களின் குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்து உள்ளனர். 


மேலும் படிக்க | தாயை தனிமையில் விட்டுவிட்டு வெளிநாடு செல்ல முயன்ற மகன் விமான நிலையத்தில் கைது 


அந்த குரூப்பிலிருந்து வெளியே வந்த இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த புகைப்படத்தை பார்த்த கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டியும், தனது முகநூலில் பகிர்ந்து ‘மரணமே வாழ்வின் இறுதியான உண்மை மகிழ்ச்சியோடு வாழ்ந்தவர்களுக்கு புன் சிரிப்போடு ஒரு வழி அனுப்புதல் செய்வதை விட வேறு சந்தோஷம் இல்லை’ என்றும் ‘இந்த போட்டோவுக்கு எதிர் விமர்சனங்கள் வேண்டாம்’ என்றும் பதிவு செய்திருந்தார். 


தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்கள் அதிகமாக வந்ததை தொடர்ந்து பதில் அளிக்க உறவினர்களும் களமிறங்கினார். ‘மர்யாம்மாவுக்கு வயது 95. இதுவரையிலும் மகன்கள், மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேத்தி, பேரன் போன்றவர்களுடன் மிகவும் நேசத்தோடு வாழ்ந்தார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்த மர்யம்மாவின் ஒரு சில நல்ல நினைவுகளே எங்கள் உள்ளத்தில் உள்ளன. இவருடன் இருந்த அந்த சந்தோஷமான நிகழ்வுகளை நினைவாக வைத்துக் கொள்வதற்காகவே உறவினர்கள் அனைவருமாக இணைந்து இந்த புகைப்படத்தை எடுத்துக் கொண்டோம். அல்லாமல் சமூக வலைதளங்களில் வைரலாக வேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் புகைப்படம் எடுக்கவில்லை’ என மூதாட்டியின் உறவினர்கள் பதிலடி கொடுக்கத் துவங்கியுள்ளனர்.


மேலும் படிக்க | எப்புடிலாம் யோசிக்குறாய்ங்க... திருமண அழைப்பிதழில் தெறிக்கவிட்ட மதுரை மாப்பிள்ளை! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ