ரீல்ஸ் மோகத்தில் சிறுவனின் விபரீத விளையாட்டு: போலீசிடமே கைவரிசை

Ramanathapuram: ராமநாதபுரத்தில் ஒரு சிறுவனின் விபரீத விளையாட்டால் பெற்றோர்களும் போலீசாரும்  திகைத்துப் போய் உள்ளனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 24, 2022, 03:25 PM IST
  • அதிகரித்து வரும் ரீல்ஸ் மோகம்.
  • ரீல்ஸ் எடுக்க விபரீத விளையாட்டில் ஈடுபட்ட சிறுவன்.
  • சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரீல்ஸ் மோகத்தில் சிறுவனின் விபரீத விளையாட்டு: போலீசிடமே கைவரிசை title=

ரீல்ஸ் சிறுவர்களையும், பெரியவர்களையும் கவரும் பொதுவான தளமாக உள்ளது. அதிலும் சிறுவர்களை அது தன் வசம் ஆக்ரமித்துள்ளது என்றே கூறலாம். இது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், இதன் காரணமாக சிறுவர்கள் தங்கள் உடல் நலம், மன நலத்தை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் கல்வியில் நாட்டம் குறைவதால், பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ? என்று பெற்றோரும் கவலைப்படுகிறார்கள். 

ராமநாதபுரத்தில் ஒரு சிறுவனின் விபரீத விளையாட்டால் பெற்றோர்களும் போலீசாரும்  திகைத்துப் போய் உள்ளனர். ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் கணேசன். இவர் ராமநாதபுரம் வண்டிக்கார தெரு கடை வீதியில் ரோந்து பணியில் இருந்துள்ளார். 

அப்போது சிறுவன் ஒருவன் போலீசாரை கிண்டல் செய்யும் விதமாக வீடியோ எடுத்து, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு  செய்துள்ளான். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க | ’அடக்குமுறையை மீறி வளர்ந்தவன்’ கோவை அரசு விழாவில் முதலமைச்சர் கர்ஜணை 

இந்த நிலையில் இந்த வீடியோ வைரல் ஆனது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மூலம் காணொளிகளை ரிலீஸ் செய்வது இன்று ஃபேஷனாகிவிட்டது. இன்ஸ்டாகிராமைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும் ரீல்ஸுக்கான பார்வைகளும் பதிவிடும் காணொளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

இந்தச் சூழலில் ரீல்ஸுக்காகவும் லைக்ஸ் வாங்குவதற்காகவும் பள்ளி மாணவர்களும் சிறுவர்களும் செய்யும் ஒழுங்கீனங்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த ரீல்ஸ் மோகம் சிறுவர்களை எங்கு கொண்டு போய் நிறுத்தும் என்ற அச்சம் தலை தூக்கியுள்ளது. 

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி விவகாரம் - மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News