கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தலுக்கு இன்னும் ஒன்பது நாட்களே உள்ள நிலையில் அங்கு இரு பெரும் கட்சிகளாக உள்ள காங்கிரஸ் மற்றும் பாஜக தங்கள் பலத்தை நிரூபிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தங்களின் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான பாஜக காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கவும் தீவிரமாக போராடி வருகிறது.


இந்நிலையில், தமிழ் சினிமாவில் சிம்பு குத்து படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா திவ்யா ஸ்பந்தனா. அதன் பிறகு தனுஷுடன் பொல்லாதவன், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் போன்ற படங்களின் பிரபலமானவர் இவர். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை துவக்கினார்.தற்போது காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தலைவராக செயல்பட்டு வரும் ரம்யா நேற்று மோடியை பற்றிய ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.  


அந்த ட்விட்டரில் அவர் பிரதமர் மோடியிடம் ஒரு புகைப்படத்துடன் சர்ச்சையான கேள்வியையும் கேட்டுள்ளார். 


அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில்...! 


“பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு பயணத்தின்போது அணிந்திருந்த கோட் மிகவும் ஃபேன்சியாக உள்ளது. உங்களது லோரோ பியானா ஜாக்கெட் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. இதன் விலை 17,000 யூரோ மட்டுமே. மிகவும் குறைவான விலை. சரி, யாருடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி இதை வாங்கினீர்கள் மோடி?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.



லோரோ பியானா ஆடையின் இந்திய மதிப்பு ரூ.13.6 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.