இடைத்தரகர்கள் ஆதிக்கம் உள்ள பஞ்சாப், ஹரியானாவில் வேளாண் மசோதாவிற்கு எதிரான போராட்டம்!!
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் மசோதாக்களில் இல்லாத அம்சங்கள் எல்லாம், இருப்பதாக கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
மத்திய அரசு, விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இதை அடுத்து பஞ்சாப் ஹரியாணாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கிறது. விவசாயிகள் இடைதரகர்கள் தலையீடு இல்லாமல், தங்கள் உற்பத்திக்கான விலைகளை தாங்களே நிர்ணயித்து கொள்ளலாம்.
மேலும் விளை பொருட்களுக்கான ஒப்பந்தங்கள் முன்னதாகவே போடப்படுவதால், விவசாயிகள் இலாபகரமான பயிர்களை சுதந்திரமாக் தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது.
வேளாண் மசோதாக்களுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள, பாரதிய கிசான் யூனியன் (BKU), அகில இந்திய விவசாயிகள் சங்கம் ( AIFU), அகில இந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC), மற்றும் அகில இந்திய கிசான் மகாசங்கம் (AIKM) ஆகியவை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதனால் ரயில் சேவைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களது போராட்டத்தினால், செப்டெம்பர் 24 முதல் 26 வரை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது
அரசியல் ஆதாயத்திற்காக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்கள் பற்றிய தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குற்றம் சாட்டியுள்ளார். தங்கள் சுயநலனுக்காக விவசாயிகளை சிலர் தூண்டி விடுவதாக அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டங்களில் இல்லாத அம்சங்கள் எல்லாம், இருப்பதாக கூறி பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன என்று அவர் மேலும் தெரிவித்தார். உதாரணத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலை இனிமேல் இருக்காது என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று அவர் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடரும் என்பது தான் உண்மை நிலை என்றும் அவர் கூறினார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR