புதுடில்லி: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, கடந்த 72 நாட்களாக தில்லியின் எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினையில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi)  இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சரவை சகாக்களுடன் ஒரு கூட்டம்நடத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மூத்த அமைச்சரவை சகாக்களுடன் பிரதமர் (PM Narendra Modi) நடத்தியுள்ள இந்த சந்திப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தகவல் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகள் போராட்டம்  காரணமாக, மக்களவையின் நடவடிக்கையும்  பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அரசாங்கத்தால் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவோ, மசோதாவை நிறைவேற்றவோ முடியாது. இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் திங்கள்கிழமை பதிலளிப்பார்.


டெல்லி எல்லை பகுதியில் விவசாயிகள் கடந்த இரண்டரை மாதங்களாக போராட்டம்  (Farmers Protest) நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்திர பிரதேசத்தை விவசாயிகள், திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூர் எல்லையில் அமர்ந்து இரண்டரை மாதங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில், விவசாயிகள் ஜனவரி 26 அன்று டெல்லியில் ஒரு டிராக்டர் அணிவகுப்பை நடத்தினர். இதில் பெரிய அளவிலான வன்முறை நடைபெற்று, சுமார் 500 காவல் துறையினர் காயமடைந்தனர். ராகேஷ் டிக்கைட் மற்றும் பிற வேளாண் சங்க தலைவர்கள் மீது யுஏபிஏ மற்றும் பிற கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு ராகேஷ் டிக்கைட் கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கியுள்ளார். நாட்டில், பிப்ரவரி 6 ஆம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் நடைபெறுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னர், உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறாது என டிக்கிட் அறிவித்தார். இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜக அரசு உள்ளது, வன்முறை நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிக்கைட் இந்த போராட்டத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். 
 


ALSO READ | ஒரு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமே போராடுகின்றனர் : நரேந்திர சிங் தொமர்