Toolkit விவகாரத்தில், காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் (Greta Thunberg ) சமூக ஊடகங்களில் விவசாயிகள் போராட்டத்தின் சர்வதேச சதியை அம்பலப்படுத்தும் வகையில், தவறுதலாக, அது தொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய 'டூல்கிட்' என்னும் ஆவணத்தை தனது ட்விட்டர் கணக்கில் பகிர்ந்து கொண்டார். இந்த வழக்கில் பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிரெட்டா பகிர்ந்த டூல் கிட் தொகுப்பில் ஜனவரி 26 போராட்டங்கள் பற்றிய விவரங்கள் இருந்தன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான ட்வீட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை டேக் செய்ய வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இதை அடுத்து,  இந்த டூல் கிட் தொகுப்பை பதிவேற்றியவர்களின் கணிணி ஐபி முகவரியைக்  (IP address) கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை கூகிளின் உதவியை நாடியது. 
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழு பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது சுற்று சூழல் ஆர்வலரை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) கைது செய்தது. திஷா ரவி டூல் கிட்டில், சில மாற்றங்களை செய்து பின்னர் அதை அவர் மற்றவர்களுக்கு அனுப்பினார் என தில்லி காவல் துறை கூற்றியது.
டெலிகிராம் ஆப் மூலம் திஷா ரவி  டூல் கிட் ஆவணங்களை கிரெட்டா தான்பெர்க்கிற்கு அனுப்பியதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர். 
தற்போது இந்த வழக்கில் ஜேக்கப் மற்றும் மற்றொரு குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்காத வாரண்ட் பிறப்பித்துள்ளது.


திஷா ரவி, நிகிதா ஜேக்கப் ஆகிய இருவரும் ஆவணங்களை தயாரித்ததாகவும், "காலிஸ்தான் சார்பு குழுக்களுடன்" நேரடியாக தொடர்பு கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என தில்லி காவல் துறை கூறியது.


ALSO READ | Greta Thunberg toolkit case: பெங்களூருவின் 21 வது சுற்றுசூழல் ஆர்வலர் கைது..!!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR