டெல்லி எல்லை பகுதியில் பஞ்சாப், ஹரியானா மற்றும் மேற்கு உத்திர பிரதேசத்தை விவசாயிகள், திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் போராட்டம் (Farmers Protest) நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் ஜனவரி 26 அன்று டெல்லியில் ஒரு டிராக்டர் அணிவகுப்பை நடத்தினர். இதில் பெரிய அளவிலான வன்முறை நடைபெற்று, செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. சுமார் 500 காவல் துறையினர் காயமடைந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்த ஸ்வீடன் நாட்டின் சுற்று சூழல ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க், தவறுதலாக, சதி திட்ட விபரங்கள் அடங்கிய டூல் கிட் என்னும் ஒரு தொகுப்பை பகிர்ந்து கொண்டதில், தில்லியில் நடக்கும் போராட்டத்தின் சர்வதேச சதி அம்பலமாகியது.
கிரெட்டா பகிர்ந்த டூல் கிட் தொகுப்பில் ஜனவரி 26 போராட்டங்கள் பற்றிய விவரங்கள் இருந்தன. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான ட்வீட்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆகியோரை டேக் செய்ய வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதை அடுத்து, இந்த டூல் கிட் தொகுப்பை பதிவேற்றியவர்களின் கணிணி ஐபி முகவரியைக் (IP address) கண்டுபிடிக்க டெல்லி காவல்துறை கூகிளின் உதவியை நாடியது.
இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழு பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது சுற்று சூழல் ஆர்வலரை ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 14) கைது செய்தது. திஷா ரவி டூல் கிட்டில், சில மாற்றங்களை செய்து பின்னர் அதை அவர் மற்றவர்களுக்கு அனுப்பினார் என திலி காவல் துறை கூற்றியது.
ராகேஷ் டிக்கைட் மற்றும் பிற வேளாண் சங்க தலைவர்கள் மீது யுஏபிஏ மற்றும் பிற கடுமையான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | இந்தியா சட்டங்களை மதித்தால் தான் இந்தியாவில் இடம்: Twitter, FB-க்கு எச்சரிக்கை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR