புதுடெல்லி: பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை சட்டம், கடன் தள்ளுபடி போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக டெல்லி எல்லையில் விவசாயிகள் பேரணியாக சென்று குவிந்துள்ளனர். விவசாயியகளும் அவர்களது ஆதரவாளர்களும் இன்று நாடு தழுவிய 'பாரத் பந்த்’ -ஐ கடைபிடித்தனர். தங்கள் கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், வரும் நாட்களில் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அறிவித்துள்ளது. தங்கள் அமைப்பின் பஞ்சாப் பிரிவு பிப்ரவரி 18 ஆம் தேதி ஜலந்தரில் ஒரு கூட்டத்தைக் கூட்டும் என்றும், அதைத் தொடர்ந்து புதுதில்லியில் என்சிசி மற்றும் பொதுக்குழு கூட்டங்கள் நடக்கும் என்றும், இவற்றின் மூலம் நிலைமை மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் எஸ்கேஎம் கூறியுள்ளது. இதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்படும் என கூறப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக எஸ்கேஎம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எஸ்கேஎம் உடனடியாக போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது. மேலும் தொழிலாளர்கள் மற்றும் பிற பிரிவு மக்களுடன் ஒருங்கிணைந்து பெரிய நடவடிக்கைகளை எடுக்க பல அழைப்புகள் விடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது. "நரேந்திர மோடி அரசாங்கம் வேண்டுமென்றே விவசாயிகளின் பிரச்சினைகளில் சூழலைக் கெடுத்துள்ளது, தாங்கள் ஒரு நேர்மையான அரசாங்கம் என மக்களை போலியாக நம்பவைத்து வருகிறது” என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


வாக்குறுதிகளுக்கு என்ன ஆனது: விவசாயிகள் கேள்வி


2021 டிசம்பரில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) மற்றும் பிற கோரிக்கைகளுக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்குவது குறித்து பரிசீலிப்பதற்கான ஒரு குழு அமைக்கப்படும் என்றும், இது போன்ற இன்னும் பல வாக்குறுதிகளும் வழங்கப்பட்டன என்று SKM குறிப்பிடுகிறது. இருப்பினும், அரசாங்கம் (Central Governmenr) ஏழு மாதங்களுக்குப் பிறகு, MSP வழங்குவதற்கு எதிராக வெளிப்படையாகக் கருத்து தெரிவித்தவர்களுடன் ஒரு குழுவை அமைத்தது என்றும் பயிர் பல்வகைப்படுத்தல் மற்றும் பூஜ்ஜிய பட்ஜெட் இயற்கை விவசாயம் ஆகியவை செயல் பட்டியலில் சேர்க்கப்பட்டன என்றும் எஸ்கேஎம் குற்றம் சாட்டியுள்ளது.


மேலும் படிக்க | நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் டெல்லி அரசு! கேஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கை!


“உண்மையான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குப் பதிலாக, மக்களை ஏமாற்றுவதற்காக சம்புவில் போராட்டக்காரர்களிடம் அமைச்சர்களை அனுப்பி, விவாதத்தின் முக்கிய புள்ளிகளை அரசாங்கம் ரகசியமாக வைத்திருக்கிறது. அரசு பேச்சுவார்த்தைகளை கேலிக்கூத்தாக்குகிறது" என எஸ்கேஎம் அரசாங்கத்தை மேலும் குற்றம் சாட்டியுள்ளது. 


வெள்ளிக்கிழமை, அதாவது இன்று நடந்த பாரத் பந்த், பஞ்சாபின் ஷம்பு எல்லையில் விவசாயிகள் மீது மோடி அரசாங்கமும் பாஜக தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கமும் காட்டிய கொடூரமான அடக்குமுறைக்கு எதிரான மக்களின் கோபத்தை காட்டும் வகையில் இருந்தது என எஸ்கேஎம் கூறியுள்ளது. இன்னும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் (Lok Sabha Election) வரவுள்ள நிலையில், தேசிய அளவில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையை மீண்டும் கொண்டுவர இந்த விவசாயிகள் போராட்டம் (Farmers Protest) உதவியுள்ளதாக விவசாயிக்கள் தரப்பில் கூறப்படுகிறது. 


பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (Minimum Support Price - MSP) ஒரு சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி (Farmers Loan Waiver) மற்றும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்துதல் போன்ற பல கோரிக்கைகளுக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க | உச்சமடையும் Delhi Chalo... இன்று பாரத் பந்த்... டெல்லி காவல்துறையின் சீக்ரெட் திட்டம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ