Farmers Protest: விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் விரிவுபடுத்தப்படும்- எச்சரிக்கை
புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் விரைவில் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாய அமைப்புகள் எச் சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பபி ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுடன் மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ள சூழலில், விவசாய அமைப்புகளின் அறிவிப்பு பல கேள்விகளை எழுப்புகிறது.
அண்மையில் மத்திய அரசு நிறைவேற்றிய புதிய வேளாண் சட்டங்களை(Farm bills) ரத்து செய்யக் கோரி உத்தரபிரதேசம், பஞ்சாப் (punjab), ஹரியாணா, உத்தராகண்ட் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்கள் கடந்த 27ஆம் தேதி முதல் டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர். டெல்லியை (Delhi) ஒட்டியுள்ள பிற மாநிலப் பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகளிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதோடு, டெல்லியின் முக்கிய எல்லைகளையும் முற்றுகையிடப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளதால் டெல்லியில் நிலவும் குளிருக்கு (Cold) இடையில், அரசியல் நிலைமை சூடாகிவருகிறது.
Also Read | விவசாயிகளின் போராட்டத்தால் மக்களுக்கு சிரமம்; Haryana-Punjab உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR