மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்!
மத்திய பிரதேசத்தில் தங்கள் உற்பத்திக்கான சரியான விலையை பெற வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் தங்கள் உற்பத்திக்கான சரியான விலையை பெற வேண்டும் என்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசத்தில் விவசாய பொருட்களின் உற்பத்திக்கு நியாயமான விலை வழங்கவும், விவசாய கடன் முழுவதையும் தள்ளுபடி செய்யக் கோரியும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அவர்கள், ஹர்டாவில் உள்ள மொத்த வியாபார சந்தையில் சேவல்களை போன்று காட்சி அளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான விவசாயிகளின் போராட்டத்திற்கு அம்மாநில அரசு இன்னும் பதில் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.