புதுடெல்லி: ஜனவரி நான்காம் தேதி மத்திய அரசுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால், விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாஜகான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் டெல்லியை (Delhi) நோக்கி மாபெரும் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக எச்சரித்துள்ளனர். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 38வது நாளாக தொடர்கிறது. 


பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் என பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல விவசாயிகள் கடுங்குளிரால் நொய்வாய்ப்பட்டுள்ளனர். சிலர் மரணமடைந்துள்ள நிலையிலும் தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாக விவசாயிகள் உறுதியாக இருக்கின்றனர். 


Also Read | சாதனை அளவை எட்டியது GST வசூல்... 2020 டிசம்பரில் ₹1.15 கோடி வசூல்..!!!


விவசாயிகள் (Farmers) போராட்டத்தினால் டெல்லியின் எல்லைகளில் பலத்த பாதுகாப்பு தொடர்கிறது. நூற்றுக்கணக்கான போலீசாரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு (Central Government) நடத்திய பேச்சுவார்த்தையில், மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் என 2 கோரிக்கைகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது.  


ஆனால் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவற்றுக்கு தீர்வு எட்டப்படவில்லை. இது தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.


Also Read | Corona Vaccine ஒத்திகை தமிழகத்தில் தொடங்கியது


இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடையும் என்று விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். ஆனால், இந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படும் என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.


தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக 5 சதவிகிதம் அளவுக்கே அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் குறைகூறுகின்றனர். ஜனவரி நான்காம் தேதியன்று நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று விவசாயிகள் கூறுகின்ற்னர். 


ALSO READ | ஆண்டின் முதல் நாளில் WHO வெளியிட்ட சிறந்த செய்தி! இந்தியாவுக்கு முக்கியமான நாள்!


ஹரியானாவில் வணிக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்களை மூடப்படும் என்றும், ஹரியானா ராஜஸ்தான் மாநில எல்லையில் இருக்கும் ஷாஜகான்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், டெல்லியை நோக்கி மாபெருக்ம் டிராக்டர் பேரணியாக வருவார்கள் என்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR