சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட ஃபரூக் மகள், சகோதரி கைது..
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பரூக் அப்துல்லாவின் சகோதரி கைது!!
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பரூக் அப்துல்லாவின் சகோதரி கைது!!
கடந்த ஆகஸ்ட் 05 ஆம் தேதி அரசியலமைப்பின் 370-வது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் திரும்ப பெற்றது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் மேற்கொள்வதற்கு முன்பே, ஜம்மு-காஷ்மீர் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டது. இன்டர்நெட் மற்றும் தகவல் தொலைதொடர்புகள் துண்டிக்கப்பட்டது.
மேலும், முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பலரும் தங்களின் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால், ஏறக்குறைய 2 மாதங்களாக வீட்டுக்காவலில் இருந்தவர்களை படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் மகள் மற்றும் சகோதரி கைது செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பரூக்கின் மகள் சபியா மற்றும் சகோதரி சுரய்யா உள்ளிட்ட பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், காவலில் வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்கும்படி அவர்கள் வலியுறுத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு கொண்டு சென்றனர்.