புதுடெல்லி: சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை அதிகபட்ச அளவில் பதிவாகியுள்ளது. ஏற்கனவே மூன்றாவது அலை பற்றிய அச்சம் அதிகமாக இருப்பதால், இது தற்போது பலவித கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 6 நாட்களில் இந்தியாவில் 40,000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப நாட்களில் இந்தியாவில் தொற்றின் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.


தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.


மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பில், "கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 47,000 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது அலை இன்னும் முடிவடையவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் 42 மாவட்டங்களில் தினமும் 100 க்கும் மேற்பட்டோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.” என்று கூறினார்.


ALSO READ: DGCI: 5-18 வயதினருக்கான கோவிட் தடுப்பூசியின் Biological E 2/3 கட்ட சோதனைகளுக்கு அங்கீகாரம்


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் பல்ராம் பார்கவா இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் இன்னும் ஆபத்து உள்ளது என்றும், அனைவருக்கும், முகக்கவசங்களும் (Facemask) தடுப்பூசியும் மிகவும் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். “ஆபத்து இன்னும் உள்ளது. தடுப்பூசி நோயின் தீவிரத்தை தடுக்கிறது. ஆனால் தடுப்பூசி போட்ட பிறகும், முகக்கவசம் அவசியம் ஆகும்." என்றார் அவர்.


மேலும், மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தடுப்பூசி (Vaccination) செலுத்திக்கொண்ட பின்னரே திருவிழாக்களில் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


"சிலர் இதில் கவனக்குறைவாக இருக்கிறார்கள். முகக்கவசம் இல்லாமல் பெரிய நிகழ்வுகளுக்குச் செல்கிறார்கள். இப்படி செய்வதைத் தவிர்க்க வேண்டும். வரவிருக்கும் பண்டிகை காலங்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகே பங்கேற்க வேண்டும். அப்போதுதான் கொரோனா தொற்றுநோயை நிறுத்த முடியும்," என்று அவர் கூறினார்.


ALSO READ: Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR