Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!

நஞ்சே நஞ்சை முறிக்கும் மருந்தாகும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கலாம். இதை நவீன ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆயிரக்கணக்கான ஆய்வுகளில், ஒரு குறிப்பிட்ட பாம்பின் விஷம், கோவிட் நோய்க்கு மருந்தாகலாம் என்ற ஆரம்பகட்ட தகவலை கொடுத்திருக்கிறது

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 1, 2021, 11:12 PM IST
  • ஒரு வகை பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன
  • பிரேசிலில் இருக்கும் பாம்பின் விஷம், கோவிடுக்கு மருந்தாகலாம்
  • ஆராய்சி இன்னும் பல கட்டங்களை தாண்ட வேண்டும்
Snake Poison as Covid Drug: பாம்பின் நஞ்சு, கோவிட் தொற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகலாம்!

COVID-19க்கு எதிரான போராட்டத்தில் பிரேசில் வசிக்கும் ஒரு வகை பாம்பின் நஞ்சு, உதவியாக மாறக்கூடும் என்று ஆய்வு ஒன்று கூறுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ள முடிவுகளில் முக்கியமான ஒன்று அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலிய வைப்பர் வகை பாம்புகளின் (Brazilian viper venom) விஷம், கொரோனா வைரஸ் நோய்க்கு தீர்வு தரும் கருவியாக மாறக்கூடும் என்று ஒரு ஆய்வு காட்டுகிறது.

நஞ்சே நஞ்சை முறிக்கும் மருந்தாகும் என்று சொல்ல கேள்விப்பட்டிருக்கலாம். இதை நவீன ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆயிரக்கணக்கான ஆய்வுகளில், ஒரு குறிப்பிட்ட பாம்பின் விஷம், கோவிட் நோய்க்கு மருந்தாகலாம் என்ற ஆரம்பகட்ட தகவலை கொடுத்திருக்கிறது.

READ ALSO | அற்புதமான கண்டுபிடிப்பு! நீரிலிருந்து தங்கத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

பிரேசில் ஆராய்ச்சியாளர்கள் ஜரரகுசு பிட் (jararacussu pit) என்று அழைக்கப்படும் ஒரு வகை பாம்பின் விஷத்தில் உள்ள மூலக்கூறை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது, அந்த குறிப்பிட்ட மூலக்கூறு, குரங்கு உயிரணுக்களில் கொரோனா வைரஸ் இனப்பெருக்கத்தைத் தடுக்கும் என்றும், 75 சதவிகிதம் அளவுக்கு அந்த மூலக்கூறு பெருகும் என்று கண்டறிந்துள்ளது.

மூலக்கூறுகளின் அறிவியல் சஞ்சிகை (scientific journal Molecules) என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வில், மூலக்கூறு ஒரு பெப்டைட் (peptide) அல்லது அமினோ அமிலங்களின் சங்கிலி, இது PLPro எனப்படும் கொரோனா வைரஸின் நொதியுடன் இணைக்க முடியும் என்று கூறுகிறது. இது மற்ற உயிரணுக்களை காயப்படுத்தாமல், வைரஸின் இனப்பெருக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பாக்டீரியா எதிர்ப்பு குணங்களுக்கு ஏற்கனவே அறியப்பட்ட பெப்டைட் ஆய்வகத்தில் ஒருங்கிணைக்கப்படலாம்.

READ ALSO | Thorium instead of uranium: நீரில்லா அணு உலையின் சோதனைகளைத் தொடங்கும் சீனா

மனித உயிரணுக்களில் உள்ள பொருளை சோதிக்கும் நம்பிக்கையில், விஞ்ஞானிகள் அடுத்ததாக மூலக்கூறின் வெவ்வேறு அளவுகளின் செயல்திறனை மதிப்பீடு செய்வார்கள்.

உயிரணுக்களுக்குள் வைரஸ் செல்வதை தடுக்க முடியுமா என்பதை ஆய்வுகள் மட்டுமே உறுதிசெய்ய முடியும் என்று சாவோ பாலோவின் மாநில பல்கலைக்கழகத்தின் (State University of Sao Paulo (Unesp)) அறிக்கை கூறுகிறது.

பிரேசிலின் மிகப்பெரிய பாம்புகளில் ஒன்று ஜரராகசு, 6 அடி (2 மீட்டர்) நீளம் கொண்டது. இந்த வகை பாம்புகள், கடலோர அட்லாண்டிக் காட்டில் வாழ்கின்றன. மேலும், இவை பொலிவியா, பராகுவே மற்றும் அர்ஜென்டினாவிலும் காணப்படுகின்றன.

READ ALSO | மனிதர்களுடன் உடலுறவு கொண்டதால் நியண்டர்டால்கள் அருகியிருக்கலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News