ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக சர்ச்சை கருத்து கூறிய அஸாம் கானுக்கு எதிராக வழக்கு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் தொகுதியில் அஸாம் கானுக்கு எதிராக பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதாவை போட்டியாக நிறுத்தியுள்ளது. சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய  அஸாம் கான், இங்கு 10 வருடங்கள் ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார் . ராம்பூர் மக்கள், உத்தர பிரதேச மக்கள் மற்றும் இந்திய மக்கள் அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன் என்றார்.


ஆசம் கான் பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், அவருக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து என பாஜக செய்தித் தொடர்பாளர் சந்திர மோகன் கண்டித்தார். இதைவிட தரம் தாழ்ந்த அரசியல் இருக்க முடியாது என்றும், சமாஜ்வாடி கட்சியின் உண்மையான முகத்தை இது காட்டுவதாகவும் அவர் கூறினார்.


இது குறித்து ANI செய்தி நிறுவனத்திடம் ஜெயப்பிரதா கூறுகையில், இது போன்ற சர்ச்சை எனக்கு புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2009ம் ஆண்டு சமாஜ்வாடி  கட்சியில் வேட்பாளராக இருந்தேன். ஆனால் ஒருவர் கூட ஆசம் கூறியது தவறு என எதிர்த்தும்,  என்னை ஆதரித்தும் பேசவில்லை.  நான் ஒரு பெண்ணாக இருப்பதால் அவர் என்ன கூறினார் என்பதையும் சொல்ல இயலவில்லை. நான் ஆசமிற்கு என்ன செய்தேன்? ஏன் இவ்வாறு பேச வேண்டும்?



ஆசம் நிச்சயமாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும். ஒரு வேளை அவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்ன ஆகும்? என சிந்தியுங்கள். சமூகத்தில் பெண்களுக்கென இடமே கிடைக்காது. நாங்கள் உரிமைக்காக எங்கே போக வேண்டும்? நான் இறந்தால் நீங்கள் திருப்தியாக இருப்பீர்களா? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், நான் அவ்வாறு செய்யமாட்டேன்" என அவர் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், ஜெயப்பிரதா காக்கி நிற உள்ளாடை அணிந்துள்ளதாக பேசியது சர்ச்சையான கருத்தை தொடர்ந்து அவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.