மும்பை: மெட்ரோ நகரமான மும்பையின் அந்தேரி கிழக்கில் உள்ள அலுவலக கட்டிடத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை அடைந்தன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் நடந்தவுடன் கட்டிடத்தின் அருகே இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.


அந்தேரி கிழக்கில் உள்ள ரோல்டா நிறுவனத்தில் இரண்டாவது மாடியில் உள்ள சர்வர் அறையில் ஏற்ப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கியுள்ள நபர்களைத் தேடும் நடவடிக்கை நடந்து வருகிறது.


இதற்கிடையில், சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சுவாசக் கருவிகளை அணிந்துகொண்டு, தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் தீயை அணைக்க போராடி வருகிறார்கள்.


இந்த தீ விபத்தை கட்டுப்படுத்த 11 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 9 ஜெட் டேங்கர்கள் உட்பட மொத்தம் 27 வாகனங்கள் சம்பவ இடத்தில் உள்ளன.