தில்லியில் உள்ள லாஜ்பத் நகர் சந்தையில் தீ விபத்து
தெற்கு டெல்லியில் உள்ள லாஜ்பத் நகர் சந்தையில் உள்ள ஒரு தளபாடக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ பற்றியது.
தெற்கு டெல்லியில் உள்ள லாஜ்பத் நகர் சந்தையில் (Lajpat Nagar Market) உள்ள ஒரு தளபாடக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ பற்றியதாக டெல்லி தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அவர் கூறினார்.
டெல்லி தீயணைப்புப் படையின் படி, காலை 11.26 மணிக்கு மார்கெட்டில் தீப்பிடித்தது குறித்து அவர்களுக்கு அழைப்பு வந்தது.
பாதிப்புக்கு உள்ளான தளபாடங்கள் கடை லஜ்பத் நகர் சந்தையில் இரண்டு மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் இருந்தது.
"பத்து தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதில் யாரும் காயமடையவில்லை." என்று டெல்லி தீயணைப்பு சேவையின் இயக்குனர் அதுல் கார்க் கூறினார்.
தீ விபத்துக்கான (Fire Accident) காரணம் கண்டறியப்பட்டு வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்து வருகிறார்.
ALSO READ: வானிலை முன்னறிவிப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த IMD திட்டமிட்டுள்ளது
தில்லியில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், ஷார்ட் சர்கியூட் தீ விபத்துக்கான காரணமாக இருக்குமா என்றும் ஆராயப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் தில்லியின் பல்வேறு சந்தைகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.