)
Weight Loss Tips: இன்றைய நவீன உலகில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை காரணமாக பலர் உடல் பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள். சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள்.
பல்வேறு காரணங்களால் உடல் எடை , குறிப்பாக தொப்பை கொழுப்பு மிக வேகமாக அதிகரித்து விடுகின்றது. ஆனால், இதை குறைப்பது பெரிய சவாலாகவே உள்ளது. நாம் தினமும் பயன்படுத்தும் சில உணவுப் பொருட்களின் மூலமே நம்மால் உடல் பருமனில் நிவாரணம் பெற முடியும் என்பது பலருகுத் தெரிவதில்லை. சில இயற்கையான டீடாக்ஸ் பானங்கள் உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, கலோரிகளை வேகமாக எரித்து உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றன. அத்தகைய பானங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வெள்ளரிக்காய் நீர் (Cucumber Water)
உடல் எடையை குறைக்க, வெள்ளரிக்காயில் இருந்து தயாரிக்கப்படும் டீடாக்ஸ் தண்ணீரை குடிக்கவும். இது உங்கள் உடலுக்கு போதுமான நீரேற்றத்தை வழங்குகிறது. இந்த நீர் உங்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள கலோரிகளின் அளவு மிக குறைவு. மேலும், இதில் அதிக அளவு ஆண்டி-ஆக்சிடெண்டுகளும் உள்ளன.
வெள்ளரிக்காய் தண்ணீரை தயார் செய்யும் முறை
வெள்ளரிக்காய் கொண்டு டிடாக்ஸ் பானம் தயாரிப்பது மிகவும் எளிது. இதற்கு 7 முதல் 8 வெள்ளரி துண்டுகளை எடுத்து, 1 லிட்டர் தண்ணீரில் போட வேண்டும். அதில் சில எலுமிச்சை துண்டுகள் மற்றும் புதினா இலைகளை சேர்த்து சுமார் 5 மணி நேரம் அப்படியே விடவும். உங்கள் டிடாக்ஸ் தண்ணீர் குடிக்க தயாராகி விட்டது. இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால், சில நாட்களில் பலன் தெரியும்.
சோம்பு நீர் (Fennel Water)
எடை இழப்புக்கு சோம்பு நீர் நன்மை பயக்கும். சோம்பு நீர் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது. இதன் காரணமாக உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இந்த வழியில் நீங்கள் உடற்பயிற்சியின் போது அதிக கலோரிகளை எரிக்க முடியும். சோம்பு உடலில் உள்ள நச்சுகளை நீக்கவும் உதவுகிறது.
சோம்பு தண்ணீரை தயார் செய்யும் முறை
இரண்டு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் நசுக்கிய சோம்பு சேர்க்கவும். அதன் பிறகு தண்ணீரை சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். அதன் பிறகு தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். அதில் அரை ஸ்பூன் தேன் சேர்த்து உட்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால், ஒரு ஸ்பூன் சோம்பு விதைகளை இரண்டு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் அதை குடிக்கலாம். இது உடலில் உள்ள நச்சுகளை நீக்கி எடை இழப்புக்கும் உதவும்.
இலவங்கப்பட்டை நீர் (Cinnamon Water)
எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாம். இது உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இது கொழுப்பை எரிக்கும் திறனையும் அதிகரிக்கிறது. இதனுடன், இரத்த சர்க்கரையை சீராக்கவும் இது உதவுகிறது. அதுமட்டுமின்றி, செரிமான செயல்முறையை சீராக வைத்து, உடலில் கூடுதல் கொழுப்பு சேராமல் இது பார்த்துக்கொள்கிறது. அதே நேரத்தில், அதன் அழற்சி எதிர்ப்பு பண்பு உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை தண்ணீரை தயார் செய்யும் முறை
ஒரு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். இப்போது தண்ணீரில் இரண்டு அங்குல இலவங்கப்பட்டை அல்லது இரண்டு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். இதனுடன் சிறிது இஞ்சியையும் சேர்க்கலாம். இப்போது தண்ணீரை 10 நிமிடங்கள் கொதிக்க விடவும், பின்னர் தண்ணீரை வடிகட்டவும். இதில் அரை எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உட்கொள்ளலாம்.
வெந்தய நீர் (Fenugreek Water)
வெந்தயத்தின் மூலமும் உடல் எடையை குறைக்கலாம். வெந்தயத்தின் பயன்பாடு இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதில் குறிப்பாக பயனுள்ளதாக கருதப்படுகிறது. வெந்தய நீரை உட்கொள்வது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இதனால் உடற்பயிற்சியின் போது அதிக கலோரிகளை எரிக்க முடியும். இதை உட்கொள்வதன் மூலம் அனைத்து விதமான வளர்சிதை மாற்றக் கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்கலாம்.
வெந்தய தண்ணீரை தயார் செய்யும் முறை
இரண்டு கப் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைக்கவும். அதன் பிறகு, தண்ணீரை வடிகட்டி, எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். நீங்கள் விரும்பினால், வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிக்கலாம். இது உடல் எடையை குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், இன்னும் பல வித ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ