Major Changes From December 1, 2024: நாளை டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது. வழக்கமாக, ஒரு புதிய மாதம் தொடங்கும் போதெல்லாம், பல விஷயங்களிலும் விதிகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதேபோல், டிசம்பர் மாதத்திலும் சில விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இவற்றின் தாக்கம் சாமானியர்களின் வாழ்வில் கண்டிப்பாக இருக்கும். அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள 5 பெரிய மாற்றங்கள் பற்றி இங்கே காணலாம்
LPG Price: எல்பிஜி சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றங்களை செய்கின்றன. இம்முறையும் 19 கிலோ வர்த்தக எல்பிஜி சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. வீட்டு உபயோகத்துக்கான 14 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை நீண்ட நாட்களாக மாறாமல் உள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்தில், வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலை 48 ரூபாய் உயர்த்தப்பட்டது.
SBI Credit Card: எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகள் மாறும்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’ -வில் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. டிஜிட்டல் கேமிங் தளங்களில் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படும் கிரெடிட் கார்டுகளில் வெகுமதி புள்ளிகளின் பலன்கள் வழங்கப்படாது. இந்த புதிய விதியானது கிரெடிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் கேமிங்கில் பரிவர்த்தனை செய்யும் அனைத்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பாக்கெட்டுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
Yes Bank: யெஸ் பேங்
டிசம்பர் 1 முதல், YES வங்கி விமானங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு ரிவார்டு புள்ளிகளின் எண்ணிக்கையை வரம்பிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. HDFC வங்கி அதன் Regalia கிரெடிட் கார்டின் பயனர்களுக்கான லவுஞ்ச் அணுகல் விதிகளையும் மாற்றுகிறது. புதிய விதிகளின் படி, டிசம்பர் 1 முதல் லவுஞ்ச் அணுகலுக்குத் தகுதிபெற பயனர்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.1 லட்சம் செலவழிக்க வேண்டும்.
Fake Messages: மோசடி செய்திகளை தடுக்க புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்படும்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் டிசம்பர் 1 முதல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. OTP மற்றும் வணிகச் செய்திகளைக் கண்டறிய புதிய விதிகள் செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதனால் போலி திட்டங்கள் மற்றும் ஃபிஷிங் வழக்குகள் குறைக்கப்படலாம்.
ATF Prices: ஏடிஎஃப் விலைகள் மாறலாம்
ஏர் டர்பைன் எரிபொருளின் விலையிலும் டிசம்பர் 1 முதல் மாற்றம் இருக்கலாம். இது நடந்தால், விமான பயணத்திற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
Bank Holidays: வங்கி விடுமுறைகள்
டிசம்பர் மாதத்தில் 17 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இருப்பினும், வங்கிகளின் இந்த விடுமுறைகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடலாம். டிசம்பரில் வங்கி தொடர்பான வேலை இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கியின் வங்கி விடுமுறைகளின் பட்டியலை செக் செய்துகொள்வது நல்லது. எனினும், வங்கி விடுமுறை நாட்களிலும், ஆன்லைன் முறைகளிலும், ஏடிஎம் மூலமாகவும் பரிவர்த்தனைகளை செய்யல்லாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ