நாட்டில் முதல் முறையாக மும்பையில் ஏசி மின்சார ரயில் சேவை இன்று தொடங்கியது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், புறநகர் ரயில்களில், கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் வகையிலும், புதிய ரயில் சேவைகளை துவங்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு இருந்தது.


அந்த வகையில் நாட்டிலே முதல்முறையாக ஏசி லோக்கல் ரயில்களை அறிமுகம் இன்று ரயில்வேத்துறை அறிமுகம் படுத்தி உள்ளது. தற்போது மும்பை புறநகர் பகுதிகளுக்கு இந்த ஏசி லோக்கல் ரயில்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.


இந்த ரயில் இன்று போரிவாலியில் இருந்து சர்ச்சாகேட் வரை இயக்கப்படுகிறது. ஒருநாளைக்கு 12 டிரீப் என்ற கணக்குடன் இந்த ரயில் சேவையை, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் துப்புரவு பணிக்காக இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்படும். தினமும் காலை 10.20, பகல் 12.24, பிற்பகல் 2.11 ஆகிய நேரங்களில் போரிவாலியில் இருந்தும், காலை 9.30, 11.15, பகல் 1.16 ஆகிய நேரங்களில் சர்ச்கேட்டில் இருந்தும் புறப்பட உள்ளது. பயணிகள் ஜனவரி 1 முதல் தினசரி இந்த ரயிலில் பயணம் செய்யலாம்.