புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2022ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தவுடன், நாளை மதியம் வரை நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது நான்காவது மற்றும் மோடி அரசின் 10வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்ததும் அதன் எதிரொலி, முதலில் நாடாளுமன்றத்தில் தான் எதிரொலிக்கும்.


அதற்கான வாய்ப்பை மக்களவை வழங்கவில்லை என்பதே எதிர்கட்சிகள், பொதுமக்கள் மற்றும்  அனைவரின் முதல் எதிர்வினையாக (Budget 2022 Reaction) இருக்கிறது. இது ஆதங்கமான ஆனால் உண்மையான எதிர்வினையாகும்.


ALSO READ | Union Budget 2022 : பட்ஜெட் உரையின் சில முக்கிய அறிவிப்புகள்!


இன்று காலை (2022, பிப்ரவரி 1) செவ்வாய்க்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, வங்கிகளின் பங்குகளின் விலை ஏறுமுகத்தில் இருந்தது பட்ஜெட்டின் முழுமுதல் எதிர்வினையாக (Budget 2022 Reaction) பார்க்கலாம்.


இது பங்கு சந்தைகளின் பட்ஜெட்டுக்கு முந்தைய பிரதிபலிப்பாக இருந்தாலும், பட்ஜெட்டின் சாரம்சம் தரும் எதிர்வினைகள் இன்னும் சற்று நேரத்தில் தெரியத் தொடங்கும்.


இனி, அரசியில் கட்சிகளின் எதிர்வினைகளைப் பார்க்கலாம். இது எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் முதல் எதிர்வினைப் பதிவு....



2014 முதல், இந்தியாவின் மொத்தக் கடன் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மோடியின் பொருளாதார அறிவு பேரழிவு தருவதாக இருப்பதை நிரூபித்துள்ள பட்ஜெட் இது, நமது தேசத்தின் மீதான கடன் சுமையை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும் பட்ஜெட் இது என காங்கிரஸ் கட்சி தனது முதன் எதிர்வினையை டிவிட்டரில் பதிவு செய்துள்ளது.


திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மமதா பானர்ஜி இந்த பட்ஜெட்டை, A PEGASUS SPIN BUDGET என காட்டமாக விமர்சித்திருக்கிறார். இந்த டிவிட்டர் பதிவு, பதிவிட்ட உடனே பலரால் ரீட்வீட் செய்யப்பட்டு வருகிறது.



வேலையின்மை மற்றும் பணவீக்கத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொது மக்களுக்கு பட்ஜெட்டில் எதுவுமே இல்லை என்பது வருத்தமாக இருக்கிறது. எதையும் பெரிதுபடுத்தும் அரசாங்கம் மக்களின் எதிர்ப்பார்ப்புகளை தொலைத்துவிட்டது என மமதா பானர்ஜி, பட்ஜெட்டை விமர்சித்திருக்கிறார்.


ALSO READ |  Budget 2022: ஊழியர்களின் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் அதிகரிக்கப்பட்டால் சம்பளம் இரட்டிக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR