New Rules From Decembe | டிசம்பர் 1 முதல் அமலுக்கு வந்த 5 முக்கிய அறிவிப்புகள்!
December Month Rule Changes News In Tmail: டிசம்பர் 1 முதல் அமலுக்கு வர உள்ள ஐந்து முக்கிய அறிவிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்.
New Rules From December: டிசம்பர் மாதத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது டிசம்பர் 1 முதல் அமலுக்கு வர உள்ள ஐந்து முக்கிய அறிவிப்புகள் பற்றி அறிந்துக்கொள்ளுங்கள். ஆதார் அட்டை, பான் கார்டு, சிம் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் கேஸ் சிலிண்டர் குறித்து முக்கியமான அறிவிப்புகள் அமலுக்கு வந்துள்ளது. அது என்ன அறிவிப்புகள் என்று பார்ப்போம்.
ஆதார் அட்டை செய்திகள்
டிசம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு ஆதார் அட்டையில் இலவசமான அப்டேட் செய்ய முடியாது. எனவே டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டும் என்றால் செய்துவிடுங்கள். மை ஆதார் போர்ட்டல் (My Aadhaar Portal) மூலம் முகவரி, போன் நம்பர் மாற்றம் செய்ய நினைத்தால், இலவசமாக அப்டேட் செய்துக்கொள்ளுங்கள். அதுவே ஆதார் ஈ-சேவை மையத்துக்கு சென்று ஆதார் அட்டையில் அப்டேட் செய்தால் ₹50 சார்ஜ் செய்யப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
பான் கார்டு செய்திகள்
டிசம்பர் 31, 2024க்கு முன் ஆதார் அட்டையுடன் நிரந்தர கணக்கு எண்ணை (Permanent Account Number) இணைக்குமாறு வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால், பான் கார்டு செயலிழந்து பரிவர்த்தனை சிக்கல்கள் மற்றும் பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அதிகரித்து வரும் நிதி மோசடிக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. எனவே இந்தியாவின் வரி செலுத்துவோர் அனைவரும் ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைப்பது கட்டாயம்.
சிம் கார்டு செய்திகள்
சிம் கார்டு குறித்து வெளியான செய்தியில், நாம் பயன்படுத்தக்கூடிய ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் என எந்த நிறுவனத்தின் சிம் கார்டாக இருந்தாலும், டிசம்பர் 1 முதல் புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. டிராய் என சொல்லக்கூடிய இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India), "இனி சிம் கார்டுக்கு வரக்கூடிய அனைத்து மெசேஜ்களையும் டிரேஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளார். அதாவது ஃபேக் மெசேஜ், ஸ்கேம் மெசேஜ் போன்ற மோசடிகளை தடுக்க புதிய விதி அமல் கொண்டுவரப்பட்டு உள்ளது" எனக் கூறியுள்ளனர்.
கிரெடிட் கார்டு செய்திகள்
நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவராக இருந்தால், உங்களுக்கான முக்கிய செய்தியும் வந்துள்ளது. கிரெடிட் கார்டு குறித்து சில விதிகள் அமலுக்கு வந்துள்ளது. எஸ் பேங்க் (Yes Bank) கிரெடிட் கார்டு மூலம் விமானங்கள் மற்றும் ஹோட்டல்கள் புக் செய்யும் போது கிடைக்கும் வெகுமதி புள்ளிகள் எனச் சொல்லக்கூடிய ரிவார்டு பாயிண்ட் (Reward Points) வரம்புக்குள் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளனர். அதேபோல எச்டிஎப்சி ரெகுலியா கிரெடிட் கார்டு (HDFC Regalia Credit Card) வைத்திருந்தால், ஒவ்வொரு காலாண்டிற்குள் ஒரு லட்சம் ரூபாய் கட்டாயமாக செலவழிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். எஸ்பிஐ வங்கி (SBI) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) இரண்டு வங்கிகளும் ரிவார்டு பாயிண்ட் (Reward Points) மற்றும் கிரெடிட் கார்டு (Credit Card) கட்டணங்களை திருத்ததம் செய்கின்றன.
எல்பிஜி சிலிண்டர் விலை
டிசம்பர் 1, 2024 முதல், வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை (LPG Cylinder Price) மத்திய அரசு எண்ணெய் பொதுத்துறை நிறுவனம் உயர்த்தி உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் அளித்த தகவலின் படி, 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ. 16.50 அதிகரித்துள்ளது.
டெல்லி: ₹1818.50
கொல்கத்தா: ₹1927
மும்பை: ₹1771
சென்னை: ₹1980.50
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22