பீகாரில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதால் சர்ச்சை
பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நலந்தாவில் பாகிஸ்தான் கொடியை ஒருவர் ஏற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
வீட்டில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டு இருந்தது தொடர்பாக தகவல் அறிந்துவந்த போலீசார் கொடியை அகற்றி, அதனை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே அப்பகுதியை சேர்ந்த மக்கள் பாகிஸ்தான் கொடியை ஏற்றியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். கொடியை ஏற்றிய குற்றவாளிக்கு எதிராக தேசதுரோக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாட்னாவில் அசாதுதீன் ஓவாய்சி மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கிற்கு ஆதரவாக கடந்த 16-ம் தேதி பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.