மக்கள் வெளியேற்றம்! டெல்லியின் யமுனை ஆற்றில் வெள்ளம்!
வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் நிறைய இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக டெல்லியின் யமுனை ஆற்றில் நாளுக்கு நாள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் நிறைய இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக டெல்லியின் யமுனை ஆற்றில் நாளுக்கு நாள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.
டெல்லியில் உள்ள யமுனா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் யமுனா நதியில் தண்ணீர் அளவு 205.50 புள்ளிகளாக உள்ளது. யமுனா ஆற்றின் பாலம் மூடப்பட்டுள்ளதால் 27 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 7 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகிறது. மேலும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் டெல்லியின் தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்த ஐந்து வருடங்களில் இப்படியான நீர்வரத்து நிகழவே இல்லை. ஹட்னிகுண்ட் குறுக்கு அணையிலிருந்து இவ்வளவு வேகத்தில் தண்ணீர் வந்தால் இரண்டு நாள்களில் அபாய அளவான 206-ஐ எட்டிவிடும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உதவிக்கு 1077 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கையாக டெல்லி அரசு 500 டென்ட்டுகளை உருவாக்கியுள்ளது.