உணவுப் பழக்கம் வழக்கம் என்பது தனி நபர் விருப்பம் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார். மேலும் நானும் ஒரு அசைவ பிரியர் என்றும் அவர் கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் மத்திய அரசு மாட்டிறைச்சிக்கு தடை விதித்தது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். தமிழகத்திலும் மத்திய அரசுக்கு எதிராக மாட்டுக்கறி விருந்து களைக்கட்டியது. 


இந்நிலையில் மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளுக்கு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பதிலடி கொடுத்துள்ளார். மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு மீதான குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு மறுத்தார். 


அடிப்படை ஆதாரமற்றவை பாஜக மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் அவர் கூறினார். உணவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன என்றும் வெங்கய்யா நாயுடு குற்றம்சாட்டினார். 


நானும் நான் வெஜ்தான் என்ன வகையான உணவை உண்ண வேண்டும் என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்தது என்றும் அவர் கூறினார். இதையெல்லாம் ஒரு பிரச்னையாக்கி செயல்படக் கூடாது என்றார்.