புதுடெல்லி: ஜெர்மனியில் நடைபெற்ற மூன்று நாடுகளின் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் இரண்டாவது கட்டத்தில், இந்தியாவின் வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் பிற நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த ஷ்ரிங்லா, இது தொடர்பான ஆர்வத்தை எடுத்துரைத்த ஷ்ரிங்லா, இந்தோ-பசிபிக் குறித்த பெர்லினின் மூலோபாயத்தை வரவேற்றார். ஷ்ரிங்லா ஜெர்மனியின் உயர்மட்ட தூதர்களைச் சந்தித்து சிந்தனைக் குழுக்களுடன் (think tanks) உரையாடினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெர்மனியில் பேசிய வெளியுறவு செயலாளர் "பிரான்சில் அண்மையில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களால் இந்தியா திகைத்துப் போயிருக்கிறது" என்றும், இவை "எங்கள் பொதுவான ஜனநாயக விழுமியங்கள் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு" அச்சுறுத்தல்கள் என்றும் கூறினார். பிரான்சில் பயங்கரவாத தாக்குதல்கள் "பயங்கரவாதத்திற்கு எல்லைகள் எதுவும் கிடையாது என்ற எங்கள் நீண்டகால கூற்றை நிரூபிப்பதாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.


பிரான்சில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரத்தை ஆசிரியர் ஒருவர் காட்டியதை அடுத்து பிரான்ஸ் நாட்டில் கத்தி தாக்குதல்களின் வடிவத்தில் பல பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டது. கடந்த வாரம், நைஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.


"பயங்கரவாதத்தை வேரோடு ஒழிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று இந்திய வெளியுறவுச் செயலர் கூறினார். பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் பேசிய அவர், பயங்கரவாதத்தின் அடித்தளமாக இருக்கும் சில "நாடுகள்" "சர்வதேச அனுதாபத்தைப் பெறுவதற்காக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனக் கூறிக்கொள்கின்றன" என்று குத்திக் கொண்டனர். "ஒத்த எண்ணம் கொண்ட நாடுகள்" ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் "எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதத்திற்கு எந்த நியாயமும் இருக்க முடியாது" என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.


இந்தோ-பசிபிக் தொடர்பாக ஜெர்மனியின் வெளியுறவுக் கொள்கை மாற்றத்திற்கும் இந்தியா வரவேற்பு தெரிவித்தது. முன்னதாக 2020 ஆம் ஆண்டில் ஜெர்மன் அரசாங்கம் இந்தோ-பசிபிக் உத்தியை அறிவித்தது. 


பிராந்தியத்தில் ஒரு முக்கியமான நாடாக இருக்கும் "இந்தியா" , "பிராந்தியத்திற்கான பகிரப்பட்ட பார்வையை செயல்படுத்த மிகவும் நம்பகமான பங்காளி" என்பதையும் ஷ்ருங்லா எடுத்துரைத்தார். சீனாவின் கடன்-பொறி ராஜதந்திரம், விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்த வேண்டிய அவசியம் மற்றும் வேறு சில விஷயங்களும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR