அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் 47 வயதான கலிக்கோ புல் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அருணாச்சல் தலைநகர் இடாநகரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.


அருணாசலபிரதேசத்தில் நபம் துகி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கட்சியின் 30 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அங்கு ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 26–ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 


இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் ஆதரவுடன் கலிகோ புல் முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டன. இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. கலிகோ புல் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வந்தது. 


ஆனால், இதனை எதிர்த்து மாநில காங்கிரஸ் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். உச்ச நீதிமன்றம் கலிக்கோ புல் பதவியேற்பு செல்லாது என அறிவித்தது. கலிக்கோ புல்லின் ஆட்சி சட்டவிரோதமானது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் கலிக்கோ புல் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.


ஆட்சி பறிபோனதால் இவர் தொடர்ந்து மன அழுத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டு ள்ளதால் அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என கூறப்படுகிறது.


தற்போது பிமா காண்டு முதல்-மந்திரியாக பதவியேற்று ஆட்சி செய்து வருகிறார்.