பரபரப்பான சூழலில் முன்னாள் முதல்வர்கள் திடீர் கைது...
காஷ்மீரில் சட்டப் பிரிவுகள் 35A மற்றும் 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீரில் சட்டப் பிரிவுகள் 35A மற்றும் 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா கைது செய்யப்பட்டனர்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 35A மற்றும் 370 சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டது. மாநிலங்களவை விவாதத்திற்கு பின், காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவும், 10% இடஒதுக்கீடு மசோதாவும் இன்று நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து காஷ்மீர், சட்டசபை உள்ள யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட உள்ளது.
முன்னதாக காஷ்மீரில் அசாதாரண சூழல் ஏற்பட்ட போதே, நள்ளிரவு முதல் இணையதள சேவைகள் முடக்கி வைக்கப்பட்டு, முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா மற்றும் மூத்த அரசியல் தலைவர் சஜாத் லோன் ஆகியோரை வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த முயற்சிக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில், ஸ்ரீநகரில் வீட்டு காவலில் வைக்கப்பட்ட உமர், முப்தி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருவரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.