புதுடெல்லி: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் உத்தரபிரதேச அமைச்சருமான சேதன் சவுகான் கொரோனா உயிர்கொல்லி வைரசுக்கு பலியானார்.  73 வயதான அவர், கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானவுடன், முதலில் லக்னோவில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிக்கிழமையன்று, சவுகானின் உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐ.சி.யூ) மாற்றப்பட்டார். சவுகானுக்கு கோவிட் -19 இருப்பது கண்டறியப்பட்டது என்பதை ஜூலை 12 ம் தேதி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உறுதிப்படுத்தினார்.


உத்தரபிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த சவுகான், இந்தியாவுக்காக மொத்தம் 40 போட்டிகளில் விளையாடி 2,084 ரன்களை குவித்துள்ளார். 1970 களின் பிற்பகுதியில் சேதன் சவுகான் சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலா போட்டிகளில் பங்கேற்றாம். சுனில் கவாஸ்கர்-சேதன் சவுகான் ஜோடி 3,000 ரன்களுக்கு மேல் அடித்தது என்பது முக்கியமாக குறிப்பிடத்தக்கது.


சவுகான் டெல்லி & மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் பல பதவிகளை அலங்கரித்துள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது டீம் இந்தியாவின் மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.


1981 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க அர்ஜுனா விருது வழங்கி சிறப்பு செய்யப்பட்ட சவுகான், 1991 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா தொகுதியிலிருந்து இரண்டு முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Read Also | NCC: 173 எல்லை மற்றும் கடலோர மாவட்டங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய விரிவாக்கத் திட்டம்