முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோன தொற்று உறுதி!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை படுத்தி எடுத்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்க கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு (Coronavirus) எண்ணிக்கை 141 மில்லியனுக்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக, தினமும் இரண்டு லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசிகள் கேட்டும், படுக்கைகள் கேட்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 10,941 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு (Manmohan Singh) கொரோனா உறுதியாகியுள்ளது. மன்மோகன் சிங் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ALSO READ | மன்மோகன் சிங் பிரதமருக்கு எழுதிய கடிதம்; பதிலடி கொடுத்த ஹர்ஷ் வர்த்தன்
முன்னதாக இன்று காலை இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அதில்., இந்தியா தற்போது அவசர நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராட தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்து, அதற்கு ஐந்து பரிந்துரைகளை அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Covid-19: கொரோனாவை சமாளிக்க மோடிக்கு டிப்ஸ் தரும் மன்மோகன் சிங்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR