புதுடெல்லி (New Delhi): முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி நேற்று குளியலறையில் தவறி விழுந்ததை அடுத்து, தலையில் காயம் ஏற்பட்டதால்,  மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அவசரகால உயிர் காக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று ராணுவ மருத்துவமனை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
  
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, பிரணாப் முகர்ஜி அவர்களின் உடல் நிலை தொடர்ந்து  கவலைக்கிடமாக உள்ளது. அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகிறார் என்று மருத்துவமனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும்,அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்,  கோவிட் -19 தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டது.


ALSO READ | கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தார் கர்நாடக முதல்வர் B S Yediyurappa...!!!


"வேறோரு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு  சென்ற போது, எனக்கு பரிசோதனை செய்ததில்,  இன்று COVID19 பாஸிடிவ் என வந்துள்ளது. கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் வந்தவர்கள்,  தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொள்ளவும்.  கோவிட் -19 க்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று முகர்ஜி திங்கள்கிழமை பிற்பகல் ட்வீட் செய்துள்ளார்.



பேராற்றல் மிக்க சொற்பொழிவாளரும் அறிஞருமான பிரணாப் முகர்ஜீ இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு காங்கிரஸின் தலைவராக இருந்தார், ஜூலை 2012 முதல் 2017 வரை உயர் பதவியில் பணியாற்றினார்.


ALSO READ | நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா!!


திங்களன்று, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ மருத்துவமனைக்குச் சென்று முன்னாள் குடியரசுத் தலைவரின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அமைச்சர் ராஜ்நாத் சிங் சுமார் 20 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்தார்.