நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உலகின் முதல் Covid-19 தடுப்பு மருந்து தயார் என்றும், தனது மகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Last Updated : Aug 11, 2020, 04:05 PM IST
  • கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா.
  • தடுப்பு மருந்து தேவையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது என்று புடின் உறுதிபடக் கூறினார்.
  • உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல விஞ்ஞானிகள் இது குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.
நீண்டகால காத்திருப்பு முடிவுக்கு வந்ததா... கொரோனா தடுப்பு மருந்து தயார் என்கிறது ரஷ்யா!! title=

கொரோனாவில் பிடியில் சிக்கி தவித்து வருகிறது உலகம். இந்நேரத்தில், மக்களுக்கோர் நற்செய்தியாக, கொரோனா தடுப்பு மருந்து தாயார் என ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்

செவ்வாயன்று ஒரு அரசு கூட்டத்தில் பேசிய, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், நாட்டில் தயாரிக்கப்பட்ட  கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவரது மகள்களில் ஒருவருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

ALSO READ | மொரீஷியஸில் பயங்கர எண்ணெய் கசிவு: அவசரநிலையை அறிவித்த அரசு..!!!

மேலும் பரிசோதனைகளின் போது தடுப்பு மருந்து மிகவும் திறமையாக செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், இது கொரோனா வைரஸிலிருந்து  காப்பாற்றிக் கொள்ள நீடித்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்றும் கூறினார்.

தடுப்பு மருந்து தேவையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது என்று புடின்  உறுதிபடக் கூறினார். தனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் புடின் கூறினார்.

மருத்துவ ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொற்றூ பரவும் ஆபத்து அதிகம் உள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ | 102 நாட்களுக்குப் பிறகு இங்கு மீண்டும் எட்டிப் பார்த்தது கொரோனா!!

கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவு செய்த முதல் நாடு ரஷ்யா. இருப்பினும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல விஞ்ஞானிகள் இது குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். பொதுவாக ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபடுத்தப்பட்டு, பல மாதங்களுக்கு நீடிக்கும் 3 கட்ட பரிசோதனைகளுக்கு முன்னர் தடுப்பூசியை பதிவு செய்வதற்கான முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

கமலேயா மையம் உருவாக்கிய தடுப்பு மருந்து, ஆகஸ்ட் 12 ஆம் தேதி பதிவு செய்யப்படும் என சில நாட்களுக்கு முன் ரஷ்யா கூறியது குறீப்பிடத்தக்கது.  கடைசி கட்ட சோதனைகள் மிகவும் முக்கியமானவை என்றும்  தடுப்பூசி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சர்  அப்போது தெரிவித்தார். 
 
முந்தைய அறிக்கையில், கமலேயா தேசிய தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பரிசோதனையில், பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

Trending News