புது டெல்லி: ஏப்ரல் 28 புதன்கிழமை முதல் 18 வயது நிரம்பிய அனைத்து வயது இந்தியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி (Coronavirus Vaccines)  போட்டுக்கொள்ள பதிவு செய்ய முடியும். ஆனால் பல மாநிலங்களும் தடுப்பூசி டோஸ் பற்றாக்குறை உள்ளதால், பல மாநிலங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்வதில் தாமதம் ஆகலாம். மே 1 ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும், தடுப்பூசி பற்றாக்குறையினால் இது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது. கொரோனா மூன்றாம் அலை தொடங்குவதற்கு முன்பே, அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை செயல்படுத்தி ஆக வேண்டும் கட்டாயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ |  Covaxin, Covishield: தடுப்பூசி விலைகள் குறையுமா; மத்திய அரசு கூறியது என்ன


சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மே 1 முதல் தடுப்பூசி திட்டத்தை ஆரம்பிக்க வாய்ப்பில்லை என்று முன்னர் கூறியிருந்தன. ஆனால் கேரளா, ஆந்திரா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தடுப்பூசி திட்டத்தை (Coronavirus Vaccines) ஆரம்பிக்கின்றன. இந்த மாநிலங்களுக்கு கூடுதல் தடுப்பூசி அளவுகள் தேவைப்படும்.


தடுப்பூசி உற்பத்தியாளர்களுடனான பலக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளது. தடுப்பூசி விநியோக காலக்கெடுவை உறுதிப் படுத்திருந்தாலும் கூட, இரண்டாவது டோஸ் தடுப்பூசி அளவுகளின் காரணமாக, 18 வயது நிரம்பிய அனைத்து வயது இந்தியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த முடியுமா என்பது சிக்கலானது.


தமிழ்நாட்டிலும் (Tamil Nadu) தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநில தலைநகர் சென்னை கார்ப்பரேஷன் (Greater Chennai Corporation) இந்த வாரம் தற்காலிக தடுப்பூசி மையங்களைத் திறந்தது. ஆனால் கோவாக்சின் சப்ளை பற்றாக்குறை காரணமாக, இந்த தடுப்பூசி மையங்கள் இரண்டாவது தடுப்பூசி டோஸ் போட வருபவர்களுக்கு மட்டுமே செலுத்த முடிவு செய்துள்ளன. 


ALSO READ |  ரஷ்யாவின் Sputnik V இந்தியாவிற்கு விரைவில் வருகிறதா; ரஷ்ய முதலீட்டு நிதியம் தகவல்


இந்திய அரசு இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி (15 Crore Vaccine Doses) அளவுகளை (156,526,140) மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது. இதில், வீணடிக்கப்பட்ட தடுப்பூசிகளை தவிர்த்து பார்த்தால், மொத்தம் 146,478,983 பேருக்கு டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR