என் பணத்தை வைத்து, ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்றுங்கள்: விஜய் மல்லையா
என் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஜெட் ஏர்வேஸைக் காப்பாற்றுங்கள்` என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்!!
என் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஜெட் ஏர்வேஸைக் காப்பாற்றுங்கள்' என்று விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்!!
இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், 2016 ஆம் ஆண்டு நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். விஜய் மல்லையாவிடம் கடன் பாக்கியை வசூலித்து தரும்படியும், விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் எனவும் 13 இந்திய வங்கிகள் மற்றும் மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
விஜய் மல்லையா வாங்கி திரும்ப செலுத்தாத கடனுக்காக அவரது சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக விஜய் மல்லையாவை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று டெல்லியில் உள்ள பணமோசடிகளை தடுக்கும் சிறப்பு நீதிமன்றதை அமலாக்கத்துறை நாடியது.
இந்நிலையில், மல்லையாவை இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடன் சுமையில் திணறி வரும் ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க தனது பணத்தை பயன்படுத்துமாறு விஜய்மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஜெட்எர்வேஸ் நிறுவனத்தை மீட்கும் முயற்சியாக வங்கிகள் நிதி வழங்குவது குறித்து மல்லையா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகள் மற்றும கடன்தாரர்களுக்கு வழங்க கர்நாடக உயர்நீதிமன்ற முன்னிலையில் தனது அசையும் சொத்துக்களை வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏன் அந்த பணத்தை வங்கிகள் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள மல்லையா, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காக்க அந்த பணம் பயன்படும் என்று தெரிவித்துள்ளார். தனது கிங்பிஷ்ஷர் விமான நிறுவனத்தை மீட்டெடுக்க பொதுத்துறை வங்கிகள் முன்வரவில்லை என்றும் மல்லையா குற்றம்சாட்டியுள்ளார்.