பூஞ்சை நோய் தொற்று நோய் அல்ல: AIIMS தலைவர் ரன்தீப் குலேரியா
இந்தியா, இரண்டாவது அலையை எதிர்த்து போராடி வரும் வேளையில், பூஞ்சை நோய் வேறு மக்களை பயமுறுத்தி வருகிறது.
இந்தியா, இரண்டாவது அலையை எதிர்த்து போராடி வரும் வேளையில், பூஞ்சை நோய் வேறு மக்களை பயமுறுத்தி வருகிறது.
மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு பூஞ்சை பாதிப்புகள் இருப்பதாக வரும் தகவல்களுக்கு மத்தியில், அதனை வண்ணங்களை வைத்து குறிப்பிடாமல், மியோகோர்மைகோஸிஸ் (mucormycosis) என்ற அதன் பெயரால் குறிப்பிடுமாறு எய்ம்ஸ் டெல்லி இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா திங்களன்று (மே 24, 2021) கேட்டுக் கொண்டார்.
தில்லியில், செய்தியாளர் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய டாக்டர் குலேரியா, பூஞ்சையை வெவ்வேறு வண்ணங்களின் பெயர்களுடன் பெயரிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறினார்.
குணம்டைந்த அல்லது குணமடைந்து வரும் COVID-19 நோயாளிகளிடம் காணப்படும் பொதுவான பூஞ்சை நோய்களில் ஒன்று மியூகோர்மைகோசிஸ் என்று அவர் கூறினார்.
"பதிவாகும் பூஞ்சை பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, ஆனால் இது ஒரு தொற்றுநோயல்ல, அதாவது கோவிட் -19 போல இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாது" என்று டாக்டர் குலேரியா மேலும் கூறினார்.
எயம்ஸ் டெல்லி இயக்குனர் கூறுகையில், மியூகோமிகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 90% -95% நோயாளிகள் நீரிழிவு நோயாளிகள் அல்லது ஸ்டெராய்டுகளை உட்கொண்டவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
ALSO READ | COVAXIN: ஜூன் 1ம் தேதி முதல் 2-18 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை
"நீரிழிவு நோய் இல்லாதவர்கள் அல்லது ஸ்டெராய்டுகளை உட்கொள்ளாதவர்களுக்கு இந்த தொற்று மிகவும் அரிதாகவே காணப்படுகிறது," என்று அவர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "தலைவலி, மூக்கிலிருந்து இரத்தப்போக்கு, கண்ணுக்கு கீழே வீக்கம், முக உணர்ச்சியினமை போன்ற அறிகுறிகள், இந்த பூஞ்சை பாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் உள்ள நோயாளிகளில் அல்லது ஸ்டெராய்டுகளை உட்கொண்டவர்களில் காணப்பட்டால், மருத்துவர்களை உடனே அணுகி, சிகிச்சை தொடங்கப்பட்டால் ஆபத்து இல்லை" எனக் கூறினார்.
COVID-19 இன் மூன்றாவது அலைகளில் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை என்று அவர் கூறினார்.
ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR