விசாகப்பட்டினம்: ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நள்ளிரவில் மீண்டும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக செய்தி வந்தது. அதன் பின்னர் நிர்வாகம் 5 கி.மீ பரப்பளவு பகுதி வரை வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ (ANI) படி, வியாழக்கிழமை காலை ஸ்டைரீன் கசிந்த அதே இடத்திலிருந்தே மீண்டும் எரிவாயு கசிவு தொடங்கியது எனத் தெரிவித்துள்ளது.


என்.டி.ஆர்.எஃப் ஒத்துழைப்பில் சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளதாகவும், ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு அதிகாரி சந்தீப் ஆனந்த் தெரிவித்தார்.


இந்த வேதனையான சம்பவத்தில் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர். 25 நோயாளிகள் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர். இறப்பவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது. 


நேற்று, இந்த சம்பவத்தை அடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளின் கூட்டத்தை காலை 11 மணிக்கு தனது இல்லத்தில் அழைத்து இந்த சம்பவம் குறித்து விவாதங்களை நடத்தினார். கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினத்தில் முகாமிட்டு மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 


நேற்று அதிகாலை ஆந்திரா விசாகப்பட்டினம் உள்ள L.G.பாலிமர் (Andhra Pradesh Gas Tragedy) நிறுவனத்தில் ஒரு ஆலையில் திடீரென ரசாயன வாயு (Poisonous Gas) கசிவு ஏற்பட்டதால், பலர் மயங்கி விழுந்தனர். பலர் தெருக்களில் மயங்கி விழுந்தனர்.