உத்தரபிரதேசத்தில் IFFCO ஆலையில் எரிவாயு கசிவு: 2 பேர் இறந்தனர், பலர் காயமடைந்தனர்
ஆரம்பகட்ட அறிக்கையின்படி, IFFCO பிரிவில் எரிவாயு கசிவால் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில், புல்பூர் பகுதியில் உள்ள இந்திய உழவர்கள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) ஆலையில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட அறிக்கையின்படி, IFFCO பிரிவில் எரிவாயு கசிவால் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் உதவி மேலாளர் பிபி சிங், துணை மேலாளர் அபிநந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். IFFCO புல்பூர் ஆலை எரிவாயு கசிவு சம்பவத்தில் 12 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த நேரத்தில், ஆலைக்குள் சுமார் 100 பேர் பணியாற்றி வந்தனர்.
தற்போது எரிவாயு கசிவு நின்றுவிட்டதாகவும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் பிரயாகராஜ் டி.எம் பானு சந்திர கோஸ்வாமி உறுதிப்படுத்தினார். IFFCO புல்பூர் பிரிவின் 15 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோஸ்வாமி தெரிவித்தார்.
இதற்கிடையில், உத்தரப்பிரதேச (Uttar Pradesh) முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
ALSO READ: இன்னும் 5 நாட்கள் மட்டுமே.. இந்தியாவுக்கு வரும் தடுப்பூசி மருந்துகள்!
புல்பூர் ஆலை இரண்டு அதிநவீன அமோனியா மற்றும் யூரியா உற்பத்தி வளாகங்களை உள்ளடக்கியது. அவை முறையே 1981 மற்றும் 1997 ஆண்டுகளில் தொடங்கப்பட்டன. இந்தத் தொழிற்சாலை வாரணாசி (Varanasi) அருகே அமைந்துள்ளது. இது அலகாபாத்துக்கும் அருகில் உள்ளது. ஆலை தளம் அலகாபாத்-ஜான்பூர்-கோரக்பூர் சாலையில் பிரயாகராஜிலிருந்து 30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
இந்திய உழவர்கள் உர கூட்டுறவு லிமிடெட் (IFFCO) இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுறவு சங்கங்களில் ஒன்றாகும். இது முழுக்க முழுக்க இந்திய கூட்டுறவு நிறுவனங்களுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடந்துள்ள எரிவாயு கசிவு (Gas Leak) விபத்து குறித்து இன்னும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ALSO READ: இனி 24×7 மின்சாரம் கிடைக்கும்.. இல்லையெனில் உங்களுக்கு இழப்புத்தொகை வழங்கப்படும்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR