பத்திரிக்கையாளார் கவுரி லங்கேஷ் கொலையினை பா.ஜ.க-வோடு தொடர்புபடுத்துவது "பொறுப்பற்றது" என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர், பி.லங்கேஷ். அவரது மூத்த மகள், கவுரி லங்கேஷ். பல்வேறு பத்திரிகைகளிலும், கட்டுரைகள் எழுதி வந்த அவர், கன்னட மொழியில் வெளியாகும், 'லங்கேஷ் பத்திரிகே' பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வந்தார்.


பெங்களூருவில் உள்ள, ராஜ ராஜேஸ்வரி நகரில், தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடி விட்டனர்.


இரு குண்டுகள் அவரது மார்பிலும், ஒரு குண்டு அவரது நெற்றியிலும் பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். 


இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் இந்நிலையில் தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பத்திரிக்கையாளார் கவுரி லங்கேஷ் கொலையினை பா.ஜ.க-வோடு தொடர்புபடுத்துவது "பொறுப்பற்றது, அடிப்படையற்ற செயல், தவறானது" என  தெரிவித்துள்ளார்.